மிரட்டும் வருமான வரித்துறை..! – அங்கீகரிக்கப்படாதஅரசியல் கட்சிகளுக்கு ஆபத்து ..!

அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளிடம் விசாரணை நடத்தக் கோரி தேர்தல் ஆணையம் வருமான வரித்துறைக்கு பரிந்துரை. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தது தொடர்பாக டெல்லி, குஜராத், உத்தரபிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஐடி ரெய்டு. பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் சந்தேகத்திற்குரிய நிதியுதவிக்கு எதிரான வரி ஏய்ப்பு விசாரணையின் ஒரு பகுதியாக, வருமான வரித் துறை இன்று(செப் 7) பல மாநிலங்களில் சோதனை நடத்தியதாக அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.

டெல்லி, குஜராத், உத்தரபிரதேசம், ஹரியானா மற்றும் சில மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் ராஜேந்திர யாதவ் வீட்டில் ஐடி துறையினர் சோதனை நடத்தினர். அவரது சட்டமன்ற தொகுதியான கோட்புட்லி மற்றும் உத்தரகாண்டில் உள்ள வணிக வளாகங்கள் உட்பட பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து விசாரணை நடத்தக் கோரி தேர்தல் ஆணையம் வருமானவரித்துறைக்கு பரிந்துரை செய்திருந்தது. அதுமட்டுமல்லாமல் அரசியல் கட்சிகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்தால் அந்தக் கட்சிகளுக்கென்று அலுவலகமே இல்லை என தேர்தல் ஆணையத்துக்கு தெரியவந்தது.
இந்த பரிந்துரையின் அடிப்படையில்தான் வருமானவரித்துறையினர் இன்று நாடுமுழுதும் தீவிரமாக ரெய்டு நடத்தி வருகிறார்கள். இதுவரை தேர்தல் ஆணையம் பதிவு செய்த அங்கீகாரம் பெறாத 2,100க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் விதிகளை மதிக்காமல் இருத்தல், தேர்தல் சட்டங்களை மீறுதல், நிதி மூலம், வருமான கணக்கைத் தாக்கல் செய்யாமல் இருத்தல், கட்சிகளின் முகவரி, அலுவலக பொறுப்பாளர்கள் ஆகியவற்றை புதுப்பிக்காமல் இருத்தல் ஆகிய காரணங்களுக்காக கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

அதிலும் சில அரசியல் கட்சிகள் தீவிரமான நிதி மோசடிகளிலும், சட்டவிரோதப் பணத்தை அரசியல் கட்சி நடத்தவும் பயன்படுத்துவது தெரியவந்து, அதன் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு ஏற்ப்ப வருமான வரித்துறை மேற்கொண்ட இந்த நடவடிக்கையால் அங்கிகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.