iphone 14 pro specs : ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் வெளியானது. அதன் சிறப்பம்சங்கள் மற்றும் முதல்பார்வை

வெகுநாளாக உலகையே எதிர்பார்ப்பில் காக்க வைத்திருந்த ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் வெளியாகியுள்ளது. முந்தைய மாடல்களில் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த செயற்கைகோள் கனெக்சன், விபத்து அறிவிப்பு வசதி போன்ற அம்சங்களோடு ஆப்பிள் ஐபோன் 14, ஐபோன் 14 ப்ளஸ், ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகியவை வெளியாகியுள்ளன.

அது மட்டுமின்றி அதனோடு சேர்த்து ஆப்பிள் ஐவாட்ச் SE, ஆப்பிள் ஐவாட்ச் 8, ஆப்பிள் ஐவாட்ச் அல்ட்ரா மற்றும் 2வது ஜென் ஏர்பாட் உட்பட வெளியிட பட்டுள்ளது. முதலில் ஐபோன் 14 சீரிஸில் இடம்பெற்றுள்ள மொபைல்களின் அம்சங்கள் மற்றும் முதல்பார்வை குறித்து பாப்போம்.

ஆப்பிள் ஐபோன் 14

ஆப்பிள் ஐபோன் 13இல் இடம்பெற்றுள்ள அதே A15 பயோனிக் சிப் கொண்டு வெளியாகியுள்ளது. ஆனால் அதன் அப்கிரேட் செய்யப்பட்ட தொழிநுட்பத்தினால் முந்தைய மாடலை விட 18% வேகமாக திறனோடு வேலை செய்யும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

A15 பயோனிக் சிப் ப்ராசசர் IP68 வாட்டர் ரெஸிஸ்டண்ட் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் 12MP+12MP பின்பக்க கேமரா + 12MP முன்பக்க கேமரா மிட்நைட், ஸ்டார்லைட் , ப்ளு, பர்ப்பில் மற்றும் ப்ரொடக்ட் ரெட் நிறங்களில் கிடைக்கிறது.6.1இன்ச் ரெட்டினா XDR டிஸ்பிளே டூயல் இ-சிம் வசதி விபத்து அறிவிப்பு வசதி(crash detection)எமெர்ஜென்சி எஸ்ஓஎஸ் வசதிசெப்டம்பர் 9 இலிருந்து ப்ரீபுக்கிங் செய்யலாம். செப்டம்பர் 16இலிருந்து பயன்பாட்டிற்கு கிடைக்கும்.
ஆப்பிள் ஐபோன் 14 ப்ளஸ்

ஆப்பிள் 14இல் உள்ள அதே வசதிகளோடு 6.7இன்ச் பெரிய டிஸ்பிளே வசதியோடு வெளியாகியுள்ளது ஆப்பிள் ஐபோன் 14 ப்ளஸ்

A15 பயோனிக் சிப் ப்ராசசர் 12MP+12MP பின்பக்க கேமரா + 12MP முன்பக்க கேமரா IP68 வாட்டர் ரெஸிஸ்டண்ட் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் 6.7இன்ச் ரெட்டினா XDR டிஸ்பிளே 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ்512GB வரை சேமிப்பு வசதி மிட்நைட், ஸ்டார்லைட் , ப்ளு, பர்ப்பில் மற்றும் ப்ரொடக்ட் ரெட் நிறங்களில் கிடைக்கிறது.டூயல் இ-சிம் வசதிவிபத்து அறிவிப்பு வசதி(crash detection)எமெர்ஜென்சி எஸ்ஓஎஸ் வசதிசெப்டம்பர் 9 இலிருந்து ப்ரீபுக்கிங் செய்யலாம். அக்டோபர் 7இலிருந்து பயன்பாட்டிற்கு கிடைக்கும்.
ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ

ஸ்மார்ட் போன் வரலாற்றில் ஒரு அதிவேகமான ப்ராசஸரோடு வெளியாகியுள்ள அதிநவீன ஐபோன் மாடல். அதன் இன்-டிஸ்பிளே டைனமிக் ஐலேண்ட் வசதி தனித்துவமான வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இது உயர்த்தப்பட்டுள்ள கேமரா மெகாபிக்ஸல் மற்றும் ஆப்பிள் ப்ரோ ரா போட்டோ வசதி ஆகியவையும் வரவவேற்ப்பை பெற்றுள்ளன.

A16 பயோனிக் சிப் ப்ராசசர் 48MP மெயின் +12MP அல்ட்ரா வைட் +12MP டெலிபோட்டோ பின்பக்க கேமரா + 12MP ட்ருடெப்த் முன்பக்க கேமரா ஸ்பேஸ் ப்ளாக், டீப் பர்ப்பில், சில்வர் மற்றும் கோல்ட் நிறங்களில் கிடைக்கிறது.6.1இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்பிளே டைனமிக் ஐலேண்ட் வசதி IP68 வாட்டர் ரெஸிஸ்டண்ட் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் டூயல் இ-சிம் வசதி விபத்து அறிவிப்பு வசதி(crash detection)எமெர்ஜென்சி எஸ்ஓஎஸ் வசதி30 நிமிடத்தில் 50% சார்ஜிங் வசதி 1டிபி வரை சேமிப்பு வசதிசெப்டம்பர் 9 இலிருந்து ப்ரீபுக்கிங் செய்யலாம். செப்டம்பர் 16இலிருந்து பயன்பாட்டிற்கு கிடைக்கும்.
ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்

ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோவில் உள்ள அதே வசதிகளுடன் 6.7இன்ச் பெரிய டிஸ்பிளேயில் வெளியாகியுள்ளது ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்

A16 பயோனிக் சிப் ப்ராசசர் 48MP மெயின் +12MP அல்ட்ரா வைட் +12MP டெலிபோட்டோ பின்பக்க கேமரா + 12MP ட்ருடெப்த் முன்பக்க கேமரா ஸ்பேஸ் ப்ளாக், டீப் பர்ப்பில், சில்வர் மற்றும் கோல்ட் நிறங்களில் கிடைக்கிறது.6.7இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்பிளே டைனமிக் ஐலேண்ட் வசதி IP68 வாட்டர் ரெஸிஸ்டண்ட் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் டூயல் இ-சிம் வசதி விபத்து அறிவிப்பு வசதி(crash detection)எமெர்ஜென்சி எஸ்ஓஎஸ் வசதி30 நிமிடத்தில் 50% சார்ஜிங் வசதி 1டிபி வரை சேமிப்பு வசதி செப்டம்பர் 9 இலிருந்து ப்ரீபுக்கிங் செய்யலாம். செப்டம்பர் 16இலிருந்து பயன்பாட்டிற்கு கிடைக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.