இந்த நகரத்திற்கு மட்டும் மீண்டும் வொர்க் ஃப்ரம் ஹோம்.. டிசிஎஸ், விப்ரோ அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தில் இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் உள்ள முன்னணி நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற நடைமுறையை அமல்படுத்தின என்பது அனைவரும் அறிந்ததே.

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து, உலகம் முழுவதும் இயல்புநிலை திரும்பியதை அடுத்து சமீபத்தில் கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் மீண்டும் ஊழியர்களை தங்கள் அலுவலகங்களுக்கு வரவழைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பெங்களூரில் பெய்த கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்நகரில் மட்டும் டிசிஎஸ், விப்ரோ உள்பட பல முன்னணி நிறுவனங்கள் மீண்டும் தற்காலிகமாக வொர்க் ஃப்ரம் ஹோம் நடை முறையை அமல்படுத்தி இருப்பதாக அறிவித்துள்ளது.

பெங்களூர் ஐடி ஊழியர்களுக்கு மீண்டும் WFH.. மழை வெள்ளத்தில் மூழ்கிய அலுவலகங்கள்..!

பெங்களூரு கனமழை

பெங்களூரு கனமழை

பெங்களூரு நகரம் கடந்த ஒரு வாரமாக பெருவெள்ளத்தில் தத்தளித்து வருவதால், பெங்களூருவாசிகள் குறிப்பாக அலுவலகம் செல்வோர் தங்கள் பணியிடங்களை அடைவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். சர்ஜாபுரா, பெல்லந்தூர், வர்தூர், ஒயிட்ஃபீல்டு மற்றும் வெளிவட்ட சாலை போன்ற சில பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் அலுவலகத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து வேலை

வீட்டில் இருந்து வேலை

இந்த மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு முன்னணி ஐடி நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதை அறிவித்துள்ளன.

விப்ரோ செய்தி தொடர்பாளர்
 

விப்ரோ செய்தி தொடர்பாளர்

விப்ரோ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து கூறியபோது, ‘பெங்களூரில் உள்ள எங்கள் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். எங்கள் ஊழியர்கள் உரிய எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தி உள்ளோம் என்று கூறியதோடு தற்காலிகமாக வீட்டிலிருந்து வேலை செய்வதை உறுதி செய்துள்ளார்.

 இடையூறு இல்லை

இடையூறு இல்லை

மேலும் பெங்களூரு கனமழை காரணமாக வணிகத்திற்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும் வொர்க் ஃப்ரம் ஹோம் மூலம் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும், வணிக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் விப்ரோ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இ-காமர்ஸ் நிறுவனங்கள்

இ-காமர்ஸ் நிறுவனங்கள்

பெங்களூர் வெள்ளச் சூழலை கருத்தில் கொண்டு இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. ஒரு முன்னணி இ-காமர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், குறிப்பிட்ட இடங்களில் யாரும் சென்றடைய முடியாததால் அங்கு சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலைமை சரியாகும் வரை நாங்கள் காத்திருக்க முடிவு செய்துள்ளோம். சில இடங்களில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது என்று கூறியுள்ளார்.

அமேசான் அறிக்கை

அமேசான் அறிக்கை

இந்த நிலையில் அமேசான் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பே எங்கள் முதன்மையான முன்னுரிமை. நாங்கள் நிலைமையை மதிப்பீடு செய்து வருகிறோம். மேலும் எங்கள் ஊழியர்கள் அதிக தண்ணீர் தேங்கும் பகுதிகளில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம். வாடிக்கையாளர்களுக்கு இதுகுறித்து முன்கூட்டியே தகவல் தெரிவித்துள்ளோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

TCS, Wipro Announce Work From Home For Employees Amid Bengaluru Rain Fury!

TCS, Wipro Announce Work From Home For Employees Amid Bengaluru Rain Fury! | இந்த நகரத்திற்கு மட்டும் மீண்டும் வொர்க் ஃப்ரம் ஹோம்.. டிசிஎஸ், விப்ரோ அறிவிப்பு!

Story first published: Thursday, September 8, 2022, 7:38 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.