சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அம்மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடர் மழையால் சேலம் மாநகர் நான்குரோடு பகுதியில் உள்ள ஓடையின் வழியாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடி சாமிநாதபுரம், தோப்புக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
இதனிடையே, கனமழையால் ஏற்காடு மலைப்பாதையில் 50-க்கும் மேற்பட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.