தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (செப்..8) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை வேட்டவலம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
மதுரை
மதுரை மாவட்டம் சமயநல்லூா் மின்கோட்டம் கொண்டையம்பட்டி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் இன்று (செப்.8) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.