புதுச்சேரி : விபத்து இழப்பீடு, பணிப்பலன் தராத வழக்கில், புதுச்சேரி நீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூன்று பஸ்கள் நேற்று ‘ஜப்தி’ செய்யப்பட்டன.
புதுச்சேரி, குருமாம்பட்டை சேர்ந்தவர் முருகானந்தம், 50; பீர் கம்பெனி ஆபரேட்டர். கடந்த 2010ல், ‘ஜிப்மர்’ அருகே, தமிழக அரசு பஸ் மோதி மே 17ல் இறந்தார்.கோர்ட் உத்தரவுப்படி, வட்டியுடன் 38.64 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.இழப்பீடு வழங்காததால், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்சை ஜப்தி செய்ய மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி இளவரசன் உத்தரவிட்டார்.
கோர்ட் அமீனாக்கள் புதுச்சேரி பஸ் நிலையம் சென்று, அங்கிருந்த விழுப்புரம் கோட்ட தமிழக அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.அதுபோல, பாகூரை சேர்ந்த நகராட்சி ஊழியர் அசோகன், 2012ல் அரியாங்குப்பம் அருகே, அரசு பஸ் மோதி இறந்தார்.இந்த வழக்கில் கோர்ட் உத்தரவிட்டும், 9.35 லட்சம் ரூபாய் இழப்பீடு தராததால், கோர்ட் உத்தரவுப்படி தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ் நேற்று ஜப்தி செய்யப்பட்டது.விழுப்புரம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக டிரைவர் சுப்பிரமணியனுக்கு 3.30 லட்சம் பணிப்பலன் தராத வழக்கில், மற்றொரு பஸ்சை புதுச்சேரி கோர்ட் அமினாக்கள் ஜப்தி செய்தனர்.
ஒரே நேரத்தில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் மூன்று பஸ்கள் நேற்று ஜப்தி செய்யப்பட்டதால், புதுச்சேரி பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement