இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கன்சர்வேடிவ பாராளுமன்ற உறுப்பினர் ரணில் ஜெயவர்தன பிரிட்டனில் சுற்றாடல் உணவு மற்றும் கிராமிய அலுவல்கள் தொடர்பான இராஜாங்க செயலாளர்களாக நியமிக்கப்படுவார் என பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவிப்பு ஒன்றை விடுத்து தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில்,ரணில் மெல்கம் ஜெயவர்தன பிரிட்டனில் சர்வதேச வர்த்தகம் தொடர்பான அமைச்சராக பணியாற்றினார்.
2015 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் ,இவர் அந்நாட்டு பாராளுமன்றத்திற்கு 35 ஆயிரத்து 573 வாக்குகளை பெற்று தெரிவானார்.
இதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்றார்.