அழைப்பிதழ் அச்சடித்து விடுதியில் விவாகரத்தை கொண்டாடும் ஆண்கள்

போபால்,

மத்தியபிரதேசத்தில் ‘சகோதரர்கள் நலச்சங்கம்’ என்ற தன்னார்வ அமைப்பு கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. இந்த அமைப்பு, வரதட்சணை கொடுமை, விவாகரத்து ஆகிய வழக்குகளால் பாதிக்கப்படும் ஆண்களுக்காக குரல் கொடுத்து வருகிறது. இலவச சட்ட உதவியும் அளித்து வருகிறது. இந்தநிலையில், நீண்டகால சட்ட போராட்டத்துக்கு பிறகும், ஏராளமான பணத்தை ஜீவனாம்சமாக அளித்தும் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் விவாகரத்து பெற்ற 18 ஆண்களை அழைத்து ஒரு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

வருகிற 18-ந்தேதி, போபால் அருகே ஒரு சொகுசு விடுதியில் இந்த கொண்டாட்டம் நடக்கிறது. இதற்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ், சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இத்தகைய கொண்டாட்டம், இந்திய கலாசாரத்துக்கு எதிரானது என்று பலர் அந்த சங்கத்தின் அமைப்பாளர் ஜாகி அகமதுவிடம் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், மோசமான திருமணங்களில் சிக்கிய ஆண்கள், தற்கொலை முடிவை எடுக்காமல் விவாகரத்து பெறுவதே தங்களது விருப்பம் என்று ஜாகி அகமது கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.