சென்னை : நடிகர் சிம்புவின் மாநாடு கொடுத்த வெற்றியை தொடர்ந்து வரும் 15ம் தேதி திரையரங்குகளில் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். முன்னதாக அச்சம் என்பது மடமையடா, விண்ணை தாண்டி வருவாயா வெற்றிப் படங்களை தொடர்ந்து தற்போது இந்தப் படம் வெளியாகவுள்ளது.
இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில், படம் ஹாட்ரிக் வெற்றியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடிகர் சிம்புவின் மாநாடு படம்
நடிகர் சிம்பு தொடர்ந்து சிறப்பான கதைக்களங்களில் நடித்து ருகிறார். இவரது நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது மாநாடு படம். இந்தப் படம் டைம் லூப் அடிப்படையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியானது. தொடர்ந்து 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

வெந்து தணிந்தது காடு படம்
இந்நிலையில் சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியில் இன்னும் 3 நாட்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது வெந்து தணிந்தது காடு படம். இந்தப் படத்தில் வெயிட் குறைத்து 20 வயது பையனாக காட்சியளிக்கும் வகையில் கெட்டப்பை மாற்றி நடித்துள்ளார் சிம்பு. இருவேறு வித்தியாசமான கெட்டப்புகளில் இந்தப் படத்தில் மிரட்டியுள்ளார்.

பிரம்மாண்டமாக நடைபெற்ற இசை வெளியீடு
இந்தப் படத்தில் சிம்புவின் ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். முக்கியமான கேரக்டரில் ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். படத்தின் டீசர், பாடல்கள் வெளியான நிலையில், சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ரசிகர்கள் ஆர்வம்
ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் சிம்பு அடுத்ததாக நடித்துவரும் பத்து தல படத்திற்கும் ஏஆர் ரஹ்மான்தான் இசை. இந்த இரு படங்களையும் வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. வெந்து தணிந்தது காடு படம் இன்னும் 3 நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புக்கிங்குகள் துவங்கப்பட்டு பட்டையை கிளப்பி வருகிறது.

சிறப்பான பிரமோஷன்கள்
இந்தப் படத்தின் பிரமோஷன்கள் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. படத்திற்காக பல பேட்டிகளை இயக்குநர் கௌதம் மேனன் தந்து வருகிறார். மேலும் படத்தின் முக்கியமான பிரமோஷனாக வெந்து தணிந்தது காடு பேருந்து தமிழகம் முழுவதும் டூர் அடித்து வருகிறது. இந்த பயணத்தை கௌதம் மேனன் மற்றும் ஐசரி கணேஷ் இரு தினங்களுக்கு முன்பு துவக்கி வைத்தனர்.

மேக்கிங் வீடியோ வெளியீடு
இந்நிலையில் இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இதில் சிம்புவின் கெட்டப் மற்றும் சூட்டிங் ஸ்பாட்டில் அவரது செயல்பாடுகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு கெட்டப்புகளில் சிம்புவை பார்க்க முடிகிறது. கௌதம் மேனன், ராதிகா உள்ளிட்டவர்களும் இந்த வீடியோவில் காணப்படுகின்றனர்.

ஏராளமான ரசிகர்கள்
சிம்புவிற்கு எப்போதுமே ரசிகர்கள் ஏராளம். அவர் கைகளின் வித்தையை காட்டி நடிக்க துவங்கிய காலத்திலிருந்தே இந்த எண்ணிக்கை அதிகம். இந்நிலையில் தற்போது அவரது அடுத்தடுத்த ஹிட்களும் அவரது ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. சமீபத்தில் நடந்த வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டின்போதும் பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமான சிம்பு ரசிகர்கள் கலந்துக் கொண்டனர். இதனிடையே இந்த வீடியோ சமூக வலைதளங்களில் இந்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.