தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஐபிஓ-வில் வாங்கியிருக்கீங்களா.. உங்களுக்கு கிடைத்திருக்கா?

மும்பை: பொது பங்கு வெளியீட்டின் போது நிறுவனங்கள் சில்லறை முதலீட்டாளர்கள், தகுதி வாய்ந்த நிறுவனங்கள், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் என பிரித்து தான் வெளியீடு செய்வார்கள். அப்படி பிரித்து செய்யப்படும் பங்கு வெளியீட்டில், பங்கு வெளியீட்டுக்கு பிறகு யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு என ஒதுக்கீடு செய்வார்கள்.

ஐபிஓவில் விண்ணப்பித்த அனைவருக்குமே பங்கு கிடைக்கும் என்று கூறி விட முடியாது. எனினும் குடும்பத்தினரின் பெயரிலும் பிரித்து முதலீடு செய்யும்போது உங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி ஐபிஓ: இன்றே கடைசி.. வாங்கலாமா? வேண்டாமா?

அதிகாரப்பூர்வ தளத்தில் பார்க்கலாம்

அதிகாரப்பூர்வ தளத்தில் பார்க்கலாம்

அந்த வகையில் இன்று தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பங்கு ஒதுக்கீடு இன்று செய்யப்படவுள்ளது. இந்த பங்கு ஒதுக்கீட்டில் உங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா? என்பதை எப்படி தெரிந்து கொள்வது? வாருங்கள் பார்க்கலாம்.

இதனை பி எஸ் இ-யின் அதிகாரப்பூர்வ தளத்தில் https://www.bseindia.com/static/investors/application_statuschecksystem.aspx பார்த்துக் கொள்ளலாம்.

 

 எப்படி பார்ப்பது?

எப்படி பார்ப்பது?

அப்படி இல்லாவிடில் https://linkintime.co.in/ என்ற இணைய பக்கத்திலும் பார்த்துக் கொள்ளலாம்.

https://linkintime.co.in/MIPO/Ipoallotment.html என்ற பக்கத்திற்கு சென்று, அங்கு
Tamilnad Mercantile Bank IPO என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

அதன் பிறகு பான் விவரங்களையும் கொடுக்க வேண்டும்.

உங்களது ஐடிக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா? இல்லையா? எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்ப்ட்டுள்ளது உள்ளிட்ட சில விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

 

பி எஸ் இ-யில் எப்படி பார்ப்பது?
 

பி எஸ் இ-யில் எப்படி பார்ப்பது?

https://www.bseindia.com/investors/appli_check.aspx என்ற தளத்தில் சென்று ஈக்விட்டி என்பதை கிளிக் செய்யவும்.

ISSUE name என்ற இடத்தில் Tamilnad Mercantile Bank IPO என்பதை செலக்ட் செய்யவும்.

அடுத்ததாக உங்களது பான் எண் அல்லது அப்பிளிகேஷன் எண் என்பதை கொடுக்கவும். அதன் பிறகு im not robot என்ற பாக்ஸினை கிளிக் செய்த பிறகு, கேப்ட்சா எழுத்துகளையும் கொடுக்கவும். அதனை கொடுத்த பிறகு Search என்ற ஆப்சனை கொடுக்கவும்.

 

வெளியீட்டு விலை எவ்வளவு?

வெளியீட்டு விலை எவ்வளவு?

இதன் வெளியீட்டு தேதியானது செப்டம்பர் 5 அன்று தொடங்கிய நிலையில், செப்டம்பர் 7 அன்று முடிவடைந்தது. இந்த பொது பங்கு வெளியீட்டின் மதிப்பானது 800 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.. இந்த பங்கு வெளியீட்டில் விலையானது 500 – 525 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதன் லாட் சைஸ் 28 பங்குகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

பழமையான வங்கி

பழமையான வங்கி

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்ட இந்த வங்கி பழமையான தனியார் வங்கியாகும். கிட்டதட்ட 100 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட ஒரு வங்கியாகும். இது வங்கி மற்றும் நிதி சேவைகளை வழங்கி வரும் ஒரு வங்கியாகும். குறிப்பாக சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் சில்லறை வாடிக்கையாளர்களுக்கு தனது வங்கி சேவையினை வழங்கி வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tamilnadu mercantile bank IPO share allotment today: How to check the allotment ?

Tamilnadu mercantile bank IPO share allotment today: How to check the allotment ?/தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஐபிஓ-வில் வாங்கியிருக்கீங்களா.. உங்களுக்கு கிடைத்திருக்கா?

Story first published: Monday, September 12, 2022, 8:27 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.