சென்னை : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பட்டுப்புடவையில் எடுத்துள்ள போட்டோஷூட் இணையத்தில் டிரெண்டாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு என்று தனி இடம் உண்டு. கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
மோகன் தாஸ் , தீயவர்குலை நடுங்க, தி கிரெட் இந்தியன் கிச்சன், துருவநட்சத்திரம் போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகமானார். இதையடுத்து, கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் வெற்றியும் பெற்றார். பின்னர் அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமானார்.

நல்ல அறிமுகம்
அந்த படம் இவருக்கு இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்ததால், காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தமிழ்நாடு மாநில அரசு சிறந்த நடிகைக்கான விருதை அளித்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.

சொப்பன சுந்தரி
ஐஸ்வர்யா ராஜேஷ் லீட்ரோலில் நடிக்கும் படத்துக்கு சொப்பன சுந்தரி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜ்மல் மற்றும் சிவாத்மிகா இசை அமைத்துள்ளனர். டார்க் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

முகத்தில் பூரிப்பு
சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யாராஜேஷ், பட்டுப்புடவையில், தலையில் மல்லிப்பூ,முகத்தில் பூரிப்புடன் விதவிதமான புகைப்படத்தை எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடடா.. முகத்தில் பூரிப்பு பொங்குதே என்ன விஷயமாக இருக்கும் என்று கேட்டுவருகின்றனர்.