ரயில் பயணிகள் கவனத்திற்கு! இன்று துவங்குகிறது பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. ஜனவரி 10 ஆம் தேதி பயணிக்க விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, ஆண்டுதோறும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பணியின் காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் மக்கள், பொங்கலைக் கொண்டாட சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். இவர்கள் ரயில்களில் பயணிக்க 120 நாள்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளலாம். அந்த வகையில், வரும் ஜனவரி 10 ஆம் தேதி ரயில்களில் பயணிக்க விரும்புவோருக்கான முன்பதிவு இன்று காலை எட்டு மணிக்குத் தொடங்குகிறது.

Indian Railways, IRCTC: Good News! You can Get 80,000 rupees per month  sitting at home through IRCTC, know how… - Business League
ஜனவரி 11 ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளையும், அதைத் தொடரும் நாள்களுக்கான முன்பதிவு அடுத்தடுத்த நாட்களில் தொடங்குகிறது. ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் முன்பதிவு கவுன்டர்களிலும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையத்தளத்திலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.