`ஆம்புலன்ஸ் வரவில்லை' – புல்டோசரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர்! – இது ம.பி அவலம்

மத்தியப் பிரதேசத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் மகேஷ் பர்மன் என்பவர் காயமடைந்தார். பர்மனுக்கு ஒரு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் காலிலிருந்து அதிக அளவு ரத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் அரை மணி நேரத்துக்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

அதனால், புஷ்பேந்திர விஸ்வகர்மா என்ற நபர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முன்வந்தார். இந்த விபத்து அவருடைய கடைக்கு வெளியே நடந்ததாகத் தெரிகிறது. அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மருத்துவமனைக்கு புல்டோசரில் அனுப்பி வைக்கப்பட்டார். உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டவரை புல்டோசரில் ஏற்றிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காமல், தள்ளு வண்டி, சைக்கிள் ஆகியவற்றில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.