இளைஞர்கள் ஏன் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.. 5 காரணங்கள்!

உலகை உலுக்கிய கோவிட் பெருந்தொற்று பாதிப்பில் இருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்ள கோவிட் தடுப்பூசிகள் பெரிதும் உதவிக் கரமாக இருந்தன.
இந்தத் தடுப்பூசிகள் போட்டப் பிறகு பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்திவருகிறது. இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவருவதே காரணம்.

இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட 90 சதவீத முதியோர்கள் மூன்றாவது தடுப்பூசியான பூஸ்டர் போட்டுள்ளனர் என ஆய்வுகள் கூறுகின்றன.
வெளிநாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி முதலில் பாதிக்கப்படும் வயதினருக்கு வழங்கப்படுகிறது. அதன்பின்னர் மற்ற வயதுடைய இளைஞர்களுக்கு இந்தத் தடுப்பூசிகள் அளிக்கப்படுகின்றன.

அந்த வகையில் இங்கிலாந்தில் 18-24 வயதுக்குள்பட்ட இளைஞர்களின் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசியையும், அதில் 30 சதவீதத்தினர் பூஸ்டர் தடுப்பூசியும் போட்டுள்ளனர்.
இளைஞர்கள் ஏன் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

  1. கோவிட் தடுப்பூசிகளின் நோய் எதிர்ப்பு சக்தி காலப்போக்கில் குறைகிறது

MMR எனப்படும் தட்டம்மை, சளி மற்றும் ரூபெல்லா ஆகிய தடுப்பூசிகள் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பை வழங்க முடியும். இதற்கு நேர்மாறாக, கோவிட் தடுப்பூசிகளின் செயல்திறன் சில மாதங்களில் குறையத் தொடங்குகிறது.
இது மிகவும் படிப்படியான சரிவாகும், தடுப்பூசி போட்ட ஆறு மாதங்களில் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பில் 21% மற்றும் கடுமையான நோய்க்கு எதிராக 10% பொதுவாகக் குறைகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவது வயதானவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களில் அதிகமாகக் காணப்பட்டாலும், எல்லா வயதினரும் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால், வைரஸ் பரவுதல் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. ஆனால் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொண்ட நபர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது்.

  1. மற்ற நபர்களுக்கும் பாதுகாப்பு

இது, தடுப்பூசி போடப்பட்ட நபருக்கு மட்டும் பாதுகாப்பை வழங்காது. கோவிட் தடுப்பூசி நோய் பரவுவதைக் குறைப்பதன் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் மறைமுகமாகப் பாதுகாக்கிறது.

பல இளைஞர்கள் முதியவர்கள் அல்லது மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடிய உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் வீடுகளில் வாழ்கின்றனர்.
அல்லது அவர்களை தொடர்ந்து சந்திக்கின்றனர். மேலும் குடும்பத்தில் கர்ப்பிணி பெண்கள் கூட இருக்கலாம். முழுமையாக தடுப்பூசி போடப்படாதவர்கள், கோவிட் நோயால் பாதிக்கப்பட்டால் அவர்களின் அருகில் இருப்பவர்களுக்கும் பரவுவது அதிகரிக்கிறது.

அதேநேரம் கோவிட் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் போட்டுக்கொண்டவர்கள் இந்தப் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வது எளிது என்று இஸ்ரேலிய ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

  1. நீண்ட கோவிட் பரவலை குறைத்தல்

ஒருவர் முறையாக கோவிட் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் எடுத்துக் கொண்டார் கோவிட் வீரியத்துடன் பரவுவதை 30 சதவீதம் வரை தடுக்க முடியும்.
எனினும் சிலர் ஏன் பாதிக்கப்படுகின்றனர் என்ற தகவல்கள் தெரியவில்லை. .ஒருவர் முழுமையான கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொண்டால் ஆபத்து 15 விழுக்காடு வரை குறைகிறது.
இதுவே அவர் பூஸ்டர் எடுத்துக் கொண்டால் ஆபத்து மேலும் குறைகிறது.

  1. வேலை, படிக்கும் இளைஞர்கள்

கோவிட் பெருந்தொற்று பரவலால் நிதி நெருக்கடி அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகையால், வேலை வாய்ப்பு மற்றும் கல்வித் துறையில் உள்ள இளைஞர்கள் கட்டாயம் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் போட்டுக் கொள்ள வேண்டும்.

  1. கோவிட் தடுப்பூசி பாதுகாப்பானதா?

கடந்த இரண்டு ஆண்டுகளில், உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான கோவிட் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. கோவிட் தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளதாகவும், முக்கியமாக பாதுகாப்பானதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட வகை இரத்த உறைவு மற்றும் மாரடைப்பு (இதய தசையின் வீக்கம்) போன்ற சில தீவிர பக்க விளைவுகள் மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் அடையாளம் காணப்பட்டன.
இந்த ஆபத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், எந்தெந்த குழுக்களுக்கு தடுப்பூசி பொருந்தும் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும் என்று குறிப்பிட்ட சிலர் கவலை தெரிவித்துள்ளனர். இது உண்மையல்ல.
தடுப்பூசிகளும் கருவுறுதலை பாதிக்காது. மாறாக, நீண்ட கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட சிலரால் பாலியல் செயலிழப்பிலிருந்து அவர்கள் நன்கு பாதுகாக்கலாம்.

இங்கிலாந்தில் கோவிட் தொற்றுகள் கோடை மாதங்களில் படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளன. ஆனால் அடுத்து என்ன நடக்கும் என்பது நிச்சயமற்றது.
நாம் குளிர்காலத்தை நெருங்கும் போது, ஒரு புதிய மாறுபாடு நோய்த்தொற்றுகள் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதை விண்ணை முட்டும், கடந்த காலங்களில் இவ்வாறு நடந்துள்ளது.

ஆகவே ஆரம்ப கால தடுப்பூசிகள் அல்லது பூஸ்டர் டோஸ் எடுக்க இளைஞர்கள் முன்வர வேண்டும். தொற்றுநோய் என்பது நமது உடல் நலம் மற்றும் சமூகத்திலும் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.