நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக இருப்பது தான், தேயிலை விவசாயம். இதை அப்பகுதி மக்கள் அதிக அளவில் செய்து வருவார்கள். அன்றாடம் காலை முதல் மாலை வரை கடும் குளிரில் இந்த மக்களின் பணி தொடரும்.
இத்தகைய சூழலில், கோத்தகிரி பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் ஒரு பெண் தொழிலாளி பணிபுரியும் போது வேலை களைப்பு தெரியாமல் இருக்க பாடலை பாடி தேயிலை பறிக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேயிலை தோட்டத் தொழிலாளியின் பாடல் வைரல் pic.twitter.com/lERbRmSjaz
— Neelamegam S (@NeelamegamS3) September 13, 2022
1970 இல் சிவாஜி கணேசன் சரோஜாதேவி நடித்து வெளியான திரைப்படத்தின் சிட்டுக்குருவி முத்தம் கொடுக்க பாடலை ரெஜினா என்ற அந்த பெண் பாடுகிறார். சுசிலாவின் குரல் போலவே அந்த பெண்ணின் குரல் இருக்கின்றது.
அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வந்த போது இவர் பாடி கொண்டிருந்ததை அவர்கள் வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது தீயாக பரவி வருகின்றது.