சென்னை : நடிகர் தனுஷ் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை எல்லையற்ற நடிப்பை வழங்கி வருகிறார்.
இவரது நடிப்பில் ஒரே நேரத்தில் மாறன், அட்ராங்கி ரே, தி க்ரே மேன், திருச்சிற்றம்பலம் என படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் சிறப்பான திரைக்கதையுடன் வெளியாகி வெற்றிப்படமாக மாறியுள்ளது.
நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் கோலிவுட்டில் சிறப்பான நடிகராக ஏராளமான ரசிகர்களை பெற்றவராக உள்ளார். கோலிவுட்டில் மட்டுமில்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருகிறார். இவரது நடிப்பில் ஒரே நேரத்தில் ஜெகமே தந்திரம், அட்ராங்கி ரே, தி க்ரே மேன் என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன.

சிறப்பான திருச்சிற்றம்பலம்
இவரது நடிப்பில் தொடர்ந்து 4 படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படம் 13 நாட்களிலேயே 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது

டோலிவுட்டில் தனுஷ்
இந்நிலையில் இவரது நடிப்பில் அடுத்ததாக வாத்தி படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் தெலுங்கிலும் Sir என்ற பெயரில் உருவாகி வருகிறது. இருமொழிப்படமாக உருவாகிவரும் இந்தப் படத்தின்மூலம் டோலிவுட்டிலும் களமிறங்குகிறார் தனுஷ். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துவங்கவுள்ளன.

விரைவில் நானே வருவேன் ரிலீஸ்
இதனிடையே தன்னுடைய சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படம் இம்மாதம் 29ம் தேதி ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் பாடல், டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

ட்விட்டரில் ஆக்டிவ்
ட்விட்டர் பக்கத்தில் எப்போதுமே ஆக்டிவாக காணப்படுகிறார் தனுஷ். அவ்வப்போது தன்னுடைய படங்கள் குறித்த அப்டேட்கள், மற்ற நடிகர்களின் படங்களுக்கான வாழ்த்துகள் உள்ளிட்டவற்றை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். தன்னுடைய முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவின் முஷாபிர் இசை ஆல்பத்திற்கும்கூட இவர் தோழி என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

11 மில்லியன் பாலோயர்கள்
இந்நிலையில் ட்விட்டரில் தனுஷை பாலோ செய்யும் பாலோயர்களின் எண்ணிக்கை தற்போது 11 மில்லியனை தாண்டியுள்ளது. இதன்மூலம் இந்த சாதனையை செய்துள்ள முதல் தமிழ் நடிகர் என்ற பெருமை தனுஷிற்கு கிடைத்துள்ளது. டிவிட்டரில் சிறப்பாக செயல்பட்டு வரும் முன்னணி நடிகர்களுக்கும் குறைந்த அளவிலேயே பாலோயர்கள் உள்ளனர்.

சூர்யா, ஜிவி பிரகாஷ் அடுத்தடுத்த இடங்கள்
அந்த வகையில் நடிகர் சூர்யா அடுத்த இடத்தில் 8.1 பாலோயர்களுடன் காணப்படுகிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷிற்கு 6.4 மில்லியன் பாலோயர்களும் நடிகர் கார்த்திக்கு 2.7 மில்லியன் பாலோயர்களும் நடிகர் விஜய்க்கு 4 மில்லியன் பாலோயர்களும் உள்ளனர். சிம்புவிற்கு 6 மில்லியன் பாலோயர்கள் காணப்படுகின்றனர்.

குறையாத ரசிகர்களின் அன்பு
அந்தவகையில் 11 மில்லியன் பாலோயர்களை தாண்டியுள்ள தனுஷ், கடந்த 2010ல் ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் இவரது ரசிகர்கள் இவரை விட்டுக் கொடுக்காமல் உள்ளனர். அந்த ரசிகர்களின் அன்பின் வெளிப்பாடே தற்போது இந்த சாதனையை இவர் படைக்கவும் காரணமாக அமைந்துள்ளது.