சென்னை: இந்தியாவில் பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன்களுக்கு எப்போதுமே மக்களிடையே அமோக வரவேற்பு இருக்கும். அந்த வகையில் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது ரியல்மி நிறுவனம். நார்சோ 50i பிரைம் என அறியப்படும் இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும். அந்த வகையில் இப்போது நார்சோ 50i பிரைம் போனை இந்திய பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.
இந்த போன் பார்க்க அப்படியே அசப்பில் C33 மாடல் போனை போலவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு போன்களுக்கும் இடையிலான வேறுபாடு என்றால் அது கேமரா மட்டும் தான் என தெரிகிறது. கருநீலம் மற்றும் மின்ட் கிரீன் வண்ணத்தில் இந்த போன் கிடைக்கிறது. ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் இந்த போன் விற்பனையாகும் என தெரிகிறது. சிறப்பு அம்சங்கள்:
- 6.5 இன்ச் அளவு கொண்ட LCD திரை.
- Unisoc T612 சிப்செட்.
- ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்.
- 5000mAh திறன் கொண்ட பேட்டரி.
- 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா.
- 5 மெகாபிக்சல் கொண்டுளள்து செல்ஃபி கேமரா.
- ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது.
- மைக்ரோ USB 2.0
- 3ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ், 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த போன் வெளிவந்துள்ளது.
- 3ஜிபி வேரியண்ட் ரூ.7,999-க்கும், 4ஜிபி வேரியண்ட் ரூ.8,999-க்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Experience #MightyInStyle with all-new #realmeNarzo50iPrime featuring:
Stage Light Design
5000mAh Massive Battery
16.5cm (6.5”) FullscreenStarting from ₹7,999*
First Sale on 23rd Sept, 00:00 Hrs,
Available for Amazon Prime customers on 22nd Sept, 12:00 PM.*T&C Apply
— realme (@realmeIndia) September 13, 2022