கணவனின் திருமணத்திற்கு கேட்டரிங் கான்டராக்ட் எடுக்கும் பாக்கியா!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியலில் ஒன்று தான் பாக்கியலட்சுமி, இரவு 08:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகள் மட்டுமல்லாது ஏராளமான ஆண் ரசிகர்களும் இருக்கின்றனர்.  இந்த சீரியலில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ளது, அப்பாவி பெண்ணாக இருந்து தற்போது அதிரடி பெண்ணாக மாறியிருக்கும் பாக்கியலட்சுமி பல இல்லத்தரசிகளின் இன்ஸபிரேஷன் ஆக இருக்கிறார்.  கோபி-ராதிகா விவகாரம் எப்போது வெட்ட வெளிச்சமாகும் என அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த சம்பவம் அரங்கேறி பாக்கியாவும் கோபியும் விவாகரத்து பெற்று, கோபியும் வீட்டை விட்டு சென்றுவிட்டார்.  எவ்வளவு தான் கோபி தவறு செய்திருந்தாலும், அவரது தாயால் அவரை விட்டு கொடுக்க முடியவில்லை.  

இடையில் பாக்கியா மீது அக்கறை காட்டி வந்ததவர் தற்போது கோபி வீட்டை விட்டு சென்றதிலிருந்தே பழையபடி பாக்கியா மீது வன்மத்தை கொட்ட தொடங்கிவிட்டார்.  கோபியின் தாய் ஒருபுறம் இருக்க, மறுபுறம் இனியாவும், செழியனும் பாக்கியா மீது கோபத்தை காட்டி வருகின்றனர்.  வழக்கம்போல கோபியின் தந்தை, எழில், ஜெனி, செல்வி ஆகியோர் பாக்கியாவிற்கு ஆதரவாக இருந்து வருகின்றனர்.  கோபி வீட்டை விட்டு வெளியானதும் பொருளாதார நெருக்கடியால் குடும்பம் இருந்து வர பாக்கியா கூடுதலாக வேறு வேலையையும் தேடிக்கொண்டிருக்கிறார்.  அப்படி வேலை தேடும் சமயத்தில் ஒரு நிறுவனத்திற்கு நேர்காணலுக்கு சென்று அதில் வெற்றியும் பெற்று கேட்டரிங் கான்டராக்ட் எடுக்கும் பணியை பாக்கியா பெற்றுவிடுகிறார்.  

தனக்கு பெரிய நிறுவனத்தின் கேட்டரிங் காண்ட்ராக்டுக்கான உரிமை கிடைத்துவிட்டது நினைத்து மகிழ்ச்சியில் வீடு திரும்பிய பாக்கியா அதனை தனது குடும்பத்தினரிடம் ஆனந்தமாய் கூற கழுகுக்கு மூக்கு வியர்த்தது போன்று வந்த கோபியின் தாய் உன் வாழ்க்கையிலேயே தோத்துட்ட இதுல ஜெயிக்கிறது ஒரு விஷயமானு வசைபாட தொடங்க, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இப்போதுதான் எனது வாழ்க்கையே ஆரம்பமாகி இருக்கிறது என்று பாக்கியா கூறி கோபி தாயாரின் வாயை அடைக்கிறார்.  பாக்கியா வீட்டில் இப்படி ஒரு நிகழ்வு நடக்க ராதிகா வீட்டில் அவரின் அம்மாவும், அண்ணனும் கோபியை வரவழைத்து திருமணத்தை கோலாகலமாக நடத்துவது குறித்து பேசிக்கொண்டிருக்கின்றனர்.  திருமணத்தை எளிமையான முறையில் நடத்தலாம் என்று கோபி தெரிவிக்க ராதிகா குடும்பம் அதற்கு நோ சொல்லி நீங்கள் நல்ல முறையில் குடும்பம் நடத்த வேண்டுமென்றால் ஊரறிய திருமணம் செய்வது தான் சிறந்தது என்று திட்டவட்டமாக கூறிவிடுகின்றனர்.  

Baakiyalakshmi

திருமணத்திற்கு மண்டபம், பத்திரிக்கை என தடபுடலாக ஏற்பாடு நடக்கிறது, இந்நிலையில் பாக்கியாவிற்கு முதல் கேட்டரிங் கான்டராக்ட் கிடைக்கிறது.  தனது முதல் கேட்டரிங் கான்டராக்ட் ஆர்டரை நினைத்து மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருக்கும் பாக்கியாவிற்கு அந்த ஆர்டரில் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது, அப்படி என்ன பெரிய அதிர்ச்சி என்றால் அந்த திருமணம் கோபி-ராதிகாவுடையது.  இந்த உண்மையை தெரிந்துகொள்ளும் பாக்கியா என்ன செய்ய போகிறார்? அடுத்ததடுத்த பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல் நகர போகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.