லக்னோ: ஞானவாபி மசூதி விவகாரத்தில் இந்து பெண்கள் சார்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாரணாசி கோர்ட் உத்தரவை எதிர்த்து மனுதாக்கல் செய்தால் தங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஞானவாபி மசூதியின் வெளிச்சுவரில் இந்து கடவுள்களை தினமும் தரிசிக்க அனுமதி கோரிய மனு ஏற்கனவே விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
