சென்னை: சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் நாளை (செப்.15) திரையரங்குகளில் வெளியாகிறது.
மாநாடு படத்திற்கு பின்னர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு வெளியாவதால், சிம்புவின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்நிலையில், சிம்பு அவரது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸான அப்டேட் ஒன்றை கொடுக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
வெறித்தனமான கம்பேக் கொடுத்த சிம்பு
சிம்பு திறமையான நடிகராக இருந்தாலும் பல சர்ச்சைகளால் ஹிட் படங்களை கொடுக்க முடியாமல் தவித்து வந்தார். சிம்பு சந்தித்த பல இக்கட்டான சூழல்களிலும் ரசிகர்கள் அவரை கைவிட்டு விடாமல் முழுமையான ஆதரவு கொடுத்து தாங்கி நின்றனர். அந்த உத்வேகத்தில் கடந்தாண்டு வெளியான ‘மாநாடு’ படத்தில் வெறித்தனமான கம்பேக் கொடுத்தார். இந்தப் படத்தில் நடிப்பிலும் ஆக்சனிலும் வெரைட்டியாக வெளுத்து வாங்கிய சிம்புவை, அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.

சிம்பு ரசிகர்களுக்கு திருவிழா
அதனைத் தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் நாளை (செப்.15) வெளியாகிறது. ட்ரெய்லரிலேயே செம்ம ஆக்சன் ட்ரீட் கொடுத்திருந்த சிம்பு – கவுதம் மேனன் கூட்டணி, படத்திலும் பங்கம் செய்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுடன் இசைப்புயல் ஏஆர் ரஹ்மானும் இணைந்துள்ளதால், இந்தப் படம் செம்மையான தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், நாளை வெளியாகவுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை திருவிழாவாக கொண்டாட சிம்புவின் ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.

மன்மதன், வல்லவன் ரூட்டுக்கு திரும்பும் சிம்பு?
சிம்பு நடிப்பில் 2004ம் ஆண்டு வெளியான ‘மன்மதன்’ திரைப்படம், சூப்பர் ஹிட் அடித்தது. சைக்கோ த்ரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை சிம்பு எழுதியிருந்தார். சிம்புவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க, முருகன் இயக்கியிருந்தார், யுவன் இசையமைத்திருந்தார். சிம்புவின் கேரியரில் மிகப் பெரிய சூப்பர் ஹிட் படமாக மன்மதன் அமைந்தது. இதனைத் தொடர்ந்து 2006ல் வெளியான ‘வல்லவன்’ படத்தை சிம்பு இயக்கியிருந்தார்.

பலிக்குமா சிம்புவின் இயக்குநர் கனவு?
சிம்புவுடன் நயன்தாரா, ரீமா சென், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த ‘வல்லவன்’ படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், தொடர்ந்து சிம்பு படங்களை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் அவர் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினார். ஆனால், 2017ல் பாடல்கள், இண்டர்வெல் ஏதும் இல்லாமல் படம் இயக்கவுள்ளதாக சிம்பு தெரிவித்திருந்தார். அதன்பின்னர் அந்தப் படம் பற்றிய எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில், சிம்பு ஒரு படத்துக்கான கதை, திரைக்கதையோடு ரெடியாக இருப்பதாகவும், அதை அவரே இயக்கி நடிக்கவுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.