அபு அப்துல்லா (வயது 63) என்பவர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர். இவருக்கு மொத்தம் 53 மனைவிகள் உள்ளனர். அவர் தன்னுடைய வாழ்க்கையின் அனுபவம் குறித்து ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்த பேட்டியில், “நான் 20 வயதில் முதன்முறையாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். அவள் என்னை விட ஆறு வயது மூத்தவர். நாங்கள் இருவரும் சந்தோசமாகவே வாழ்க்கையை தொடங்கினோம். ஆனால், எங்களுக்குள் திடீரென மனக்கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து நான் 2-வது பெண்ணை திருமணம் கொண்டேன். சிறிது காலத்தில் 2-வது மனைவியுடனும் கருத்து வேறுபாடு வந்துவிட்டது.
فيديو متداول لرجل مُعدد:
تزوجت 53 مرة والجبان والخواف لا يسمع كلامي! pic.twitter.com/H4gItanxsX
— Gorgeous (@gorgeous4ew) September 2, 2022
முதல் மனைவிக்கும், 2வது மனைவிக்கும் என்னுடன் ஒத்துப்போகவில்லை. அதனால், 3-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். இப்படியே ஒவ்வொரு மனைவியையும் விவாகரத்து செய்துவிட்டு, மொத்தம் 53 திருமணம் வரை செய்துகொண்டேன். ஆனால் நான் சுகத்துக்காக திருமணம் செய்து கொள்ளவில்லை. மகிழ்ச்சியுடன் வாழவே திருமணம் செய்து கொண்டேன்” என்றார்.
அவருடைய பெரும்பாலான திருமணங்கள் சவுதி பெண்களுடன் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் தனது சொந்த வேலைக்காக வெளியே பயணம் செய்தபோது ஒரு வெளிநாட்டுப் பெண்ணையும் திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணங்கள் அமைத்தும் அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.