இன்றைய வேகமாக நகரும் வாழ்க்கையில், சமையல் என்பது கடினமான வேலையாக மாறிவிட்டது. இருப்பினும், இந்த உதவிக்குறிப்புகளைப் உங்கள் சமையல் நேரத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், உங்கள் சமையல் திறன்களை மேம்படுத்தவும் உதவும்!
தினசரி உங்கள் வேலையை எளிதாக்கும், மிகவும் பயனுள்ள சில சமையல் ஹேக்ஸ் இதோ!
உருளைக்கிழங்கு சமைக்க

உருளைக்கிழங்கு ஃபிரை செய்யும் போது அதில் சிறிது சோம்பை, தூளாக்கி தூவினால் நல்ல வாசனையுடன் இருக்கும். அதேபோல, உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது, அரைக்கரண்டி புளிப்பு இல்லாத தயிர் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
உருளைக்கிழங்கை வேகவைப்பது நேரத்தை எடுத்துக்கொள்ளும். கத்தி கொண்டு உருளைக்கிழங்கை கீறிவிடுங்கள் அல்லது குத்துங்கள். துளைகளின் வழியே வெப்பம் ஊடுருவி உருளைக்கிழங்கு சிறிது நேரத்தில் மென்மையாக்க உதவும்!
தேங்காய் உடைக்க
தேங்காய் உடைப்பது என்பது மிகவும் கடினமான வேலை என்பது தினசரி சமைப்பவர்களுக்கு ஒத்துக்கொள்வர். இனி தேங்காய் உடைக்கும் முன்பு தண்ணீரில் நனைக்கவும். பின்னர் உடைத்தால் அது எளிதில் சரிபாதியாக உடையும்.
எலுமிச்சை

எலுமிச்சை பழங்களை, ஃபிரிட்ஜில் வைப்பதற்கு பதிலாக உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் பழங்கள் புதிது போல இருக்கும், நிறைய சாறும் கிடைக்கும்.
மீன்களை கிரில் மீது சமைக்கும் போது, அதில் பாதி சதை ஒட்டிக்கொண்டிருக்கும் மற்றும் எடுக்கும் போது உடைந்து போகும், ஆனால் நீங்கள் அதை எலுமிச்சை துண்டுகளின் மேல் வைத்து கிரில் செய்தால், அதை தயாரிப்பது மிகவும் எளிதாக இருக்கும், மேலும் நல்ல சுவையுடன் இருக்கும்.
சப்பாத்தி மாவு பிசைய

சப்பாத்தி மாவு பிசையும் போது, அடிக்கடி கையில் மாவு ஓட்டிக் கொள்ளும். இதனால் மாவு சரியாக பிசைய முடியாது. இனி, சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பை தடவிக் கொள்ளுங்கள், அப்படி செய்தால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.
பேக்கிங்கிற்கான இன்கிரிடியன்ட்ஸ் கலக்கும்போது ஒரு மரக் கரண்டியைப் பயன்படுத்தினால், மென்மையான மாவு கிடைக்கும் என்று நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இது மற்ற உலோகம் அல்லது பிளாஸ்டிக் ஸ்பூனை விட நன்றாக கலக்கிறது.
இஞ்சி உரிக்க

கத்தியைப் பயன்படுத்தி இஞ்சியை உரிப்பது தேவையானதை விட அதிக சதையை உரிக்கிறது. அதற்கு பதிலாக, ஒரு ஸ்பூன் கொண்டு இஞ்சியை உரிக்கவும். இஞ்சியின் வளைவுகளில் உள்ள தோலை ஒரு ஸ்பூனைக் கொண்டு எளிதில் நீக்கிவிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“