உலகின் டாப் பில்லியனர்கள் லிஸ்டில் 2வது இடத்தில் கெளதம் அதானி.. முதலிடம் எப்போது?

ஆசியாவின் முதல் பணக்காரரும், உலகின் மூன்றாவது பெரிய பில்லியனருமாக இருந்து வந்த இந்திய தொழிலபதிர் கெளதம், தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இது அதானி குழும பங்குகள் தொடர்ந்து நல்ல ஏற்றம் கண்டு வரும் நிலையில், இந்த முன்னேற்றமானது ஏற்றம் கண்டுள்ளது.

போர்ப்ஸ்-ன் ரியல் டைம் அறிக்கையின் படி, அதானியின் நிகர மதிப்பு 155.7 பில்லியன் டாலராகும். இது 5.5 பில்லியன் டாலர் அல்லது கிட்டதட்ட 4% ஏற்றத்தில் உள்ளது.

மதுரை, தூத்துக்குடி, விருதுநகர்-க்கு ஜாக்பாட்.. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு..!

வரலாற்று உச்சத்தில் அதானி குழும பங்குகள்

வரலாற்று உச்சத்தில் அதானி குழும பங்குகள்

அதானி குழும பங்குகளான அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட பல பங்குகளும் வரலாற்று உச்சத்தில் காணப்படுகின்றது. இது அதானி குழுமத்தின் தலைவர் அதானியின் நெட்வொர்த்தினை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

70 பில்லியன் டாலர்

70 பில்லியன் டாலர்

2022ல் மட்டும் இதுவரையில் அதானியின் நிகர மதிப்பில் 70 பில்லியன் டாலருக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. டாப் 10 பில்லியனர்களில் ஒருவர் மட்டும் தனது நிகர மதிப்பில் ஏற்றத்தினை கண்ட நிலையில், பில்லியன் முகேஷ் அம்பானியை முதலில் முந்தினார். கடந்த மாதம் மைக்ரோசாப்டின் தலைவர் பில் கேட்ஸையும் விஞ்சினார். தற்போது மூன்றாவது இடத்தில் இருந்து ஜெப் பெசோஸை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கும் முன்னேறியுள்ளார்.

யார் இந்த கெளதம் அதானி
 

யார் இந்த கெளதம் அதானி

அதானி குழுமத்தின் தலைவரான 60 வயதான கெளதம் அதானி, இந்தியாவில் அகமதாபாத்தினை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு மிகப்பெரும் வணிகராவார். இவர் சுரங்கத் தொழில் தொடங்கி, உள்ளகட்டமைப்பு, மின் உற்பத்தி, ரியல் எஸ்டேட், துறைமுகம், சிமெண்ட், அடிப்படை உலோகம், நுகர்வோர் பொருட்கள் என பற்பல வணிகத்திலும் வெற்றிகரமாக கோலோச்சி வருகின்றார்.

தொடர் விரிவாக்கம்

தொடர் விரிவாக்கம்

தொடர்ந்து வேகமாக வளர்ச்சி கண்டு வரும் பில்லியனர் ஆன அதானி, தனது முதலீடுகளை பற்பல துறைகளில் விரிவாக்கம் செய்து வருகின்றார். புதிய புதிய வெற்றிகரமான வணிகத்திலும் களமிறங்கி வருகிறார். பல வெளிநாட்டு நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்களை கையகப்படுத்தி வருகின்றார். கடந்த ஜூன் மாதம் தனது 60வது பிறந்த நாளில் 60,000 கோடி ரூபாய் நன்கொடையை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதானி வசம் எவ்வளவு பங்கு

அதானி வசம் எவ்வளவு பங்கு

அதானியின் வசம், அதானி எண்டர்பிரைசஸில் 75% பங்கும், அதானி பவர் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷனிலும் 75% பங்கும் உள்ளன. இதே அதானி டோட்டல் கேஸில் 37% பங்கும், அதானி போர்ட்-ல் 65% பங்கும், அதானி கிரீன் எனர்ஜியில் 61% பங்கும் அதானி வசம் உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Gautam Adani is now 2nd richest person in the world; beats Amazon jeff Bezos

Indian businessman Gautham, who was the first richest person in Asia and the third largest billionaire in the world, has now moved 2nd place.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.