கடற்கரை என் சிகிச்சையாளர்: சொல்கிறார் அமலா பால்

திருவனந்தபுரம்: மலையாள நடிகை அமலா பால், தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்த ‘மைனா’ படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ் உள்பட சில முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த அவர், பிறகு தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களிலும், வெப்தொடர்களிலும் நடித்தார். தினமும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் கிளாமர் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களிடம் உரையாடி வரும் அவர், சமீபத்தில் ‘கடாவர்’ என்ற படத்தை தயாரித்து நடித்து ஓடிடியில்

வெளியிட்டார். இப்படத்தின் மூலம் தனக்குக் கிடைத்த சில கசப்பான அனுபவங்களை எல்லாம் மனதில் கொண்டு, இனி சொந்தப் படம் தயாரிக்க மாட்டேன் என்று அறிவித்தார். தற்போது அவரது நடிப்பில் தமிழில் வெளியாக இருக்கும் படம், ‘அதோ அந்த பறவை போல’. மலையாளத்தில் சில படங்களில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு இல்லாதபோது தனக்குக் கிடைக்கும் விடுமுறை நாட்களை உள்ளூர் மற்றும் வெளிநாடுகள் அல்லது மாலத்தீவு, கோவா போன்ற கடற்கரை பகுதிகளில் கொண்டாடுவது அமலா பாலின் வழக்கம். தற்போது அவர் மாலத்தீவு சென்றுள்ளார்.

அங்குள்ள கடற்கரை மணற்பரப்பில் ஜாலியாக உருண்டு புரண்டு எடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ள அவர், ‘கடற்கரை என் சிகிச்சையாளர்’ என்று குறிப்பிட்டுள்ளார். விவாகரத்து, 2வது திருமணம், சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகள் உள்பட பல பிரச்னைகளில் சிக்கி மன அழுத்தம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று தேறியுள்ள அமலா பால், தற்போது மாலத்தீவில்
விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.