வாணியம்பாடி: இளைஞர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு! சிறுமியை திருமணம் செய்ததால் எதிர்வினையா?

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள சி.எல்.நகர் பகுதியை சேர்ந்த தமிழரசன் – மலர் தம்பதியின் மகன் திருநாவுக்கரசு. இவர் கச்சேரி சாலையில் உள்ள அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 13 ஆம் தேதி திருமண ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சிறுமியின் தாய் வாணி வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன்னுடைய மகளுக்கு திருமண வயது பூர்த்தியாகாத நிலையில் திருமண ஆசை வார்த்தை கூறி திருநாவுக்கரசு கடத்தி சென்றதாக புகார் அளித்தார்.
image
அதைத்தொடர்ந்து இரு வீட்டாரையும் அழைத்து வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இளைஞர் திருநாவுக்கரசுவின் பெற்றோர்கள் சிறுமியை அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருநாவுக்கரசு தலைமறைவாக உள்ளதாகவும் அவரை 2 நாட்களுக்குள் காவல் நிலையத்தில் ஒப்படைப்பதாகவும் தெரிவித்தனர்.
image
சிறுமியை அவரது தாயுடன் அனுப்பி வைத்த வாணியம்பாடி மகளிர் காவல்துறையினர் திருநாவுக்கரசு மீது போக்சோ மற்றும் இளம் பெண்ணை கடத்தி சென்றதாக வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் சிறுமியின் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு சென்று திருநாவுக்கரசுவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
image
இதனால் உடனடியாக திருநாவுக்கரசு தந்தையான தமிழரசன் மற்றும் தாய் மலர் ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் தகவல் அறிந்த திருநாவுக்கரசு வீட்டிலிருந்து காவல் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, பெண்ணின் உறவினர்கள் திருநாவுக்கரசு மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டதாக அவரது உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
image
ஆனால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பெற்றோர்களை விசாரணையில் காவல்துறையினர் ஈடுபடுத்தி வந்ததால் திருநாவுக்கரசு தீக்குளித்துக் கொண்டதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருநாவுக்கரசு வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 60% தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வரும் திருநாவுக்கரசு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.