எங்கள் திருமணத்தால் சம்பாதித்துவிட்டார்கள் – தயாரிப்பாளர் ரவீந்தர்

நட்புன்னா என்ன தெரியுமா, சுட்டக்கதை, முருகைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தனது லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் சினிமா தயாரிப்பளராக மட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி விமர்சகராகவும் தன்னை முன்நிலைப் படுத்திகொண்டார். அதில் வனிதாவுக்கும் ரவீந்தருக்கும் பிரச்னையும் உருவானது. இந்தச் சூழலில் அவர் தனியார் நிகழ்ச்சி தொகுப்பாளினியும் சின்னத்திரை சீரியல் நடிகையுமான மகாலட்சுமியை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார்.

இந்தத் திருமணமானது இரண்டு பேருக்கும் இரண்டாவது திருமணமாகும். ரவீந்தரும், மகா லட்சுமியும் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. மேலும், இந்தத் திருமணம் பேசுபொருளாகவும் ஆனது. ஒருதரப்பினர் ரவீந்தரை உருவ கேலி செய்ய மறுதரப்பினர் அவருக்கு ஆதரவாக நின்றனர். அதுமட்டுமின்றி ரவீந்தரும், மகாலட்சுமியும் பல ஊடகங்களுக்கு பேட்டியும் அளித்தனர். அதேசமயம், திருமணம் என்பது இருவரது தனிப்பட்ட விஷயம் இதை ஊடகங்கள்தான் பெரிதாகுக்கின்றன என்றாலும் இவர்கள் ஏன் பேட்டி கொடுக்க வேண்டுமென்றும் பேச்சு எழுந்தது.

 

இந்நிலையில் திருமணத்திற்கு பின் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரும் அவரது மனைவி மகாலட்சுமியும் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தனர்.

அப்போது ரவீந்தர் சந்திரசேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,”ஒரு திருமணம் இவ்வளவு பரபரப்பாக பேசப்பட்டது எனக்கே அதிர்ச்சியாகியுள்ளது. திருமணம் இவ்வளவு பிரபல்யம் ஆக வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் திருமணத்திற்கு முன்பு தமிழ் திரையுலகில் பிரபலத்தின் திருமணத்தை ஒளிபரப்பிய நிறுவனம் அதில் பெறாத வருமானத்தை எங்களது திருமணத்தை வெளியிட்டு பெற்றது என்பது ஒரு வித்தியாசமான செயல். 

செல்லும் இடங்களில் எல்லாம் எங்களுக்கு வாழ்த்து கிடைப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. நான் தனித்தீவுக்கு செல்வதாக சொல்வது எல்லாம் பெரிய வதந்தி” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.