பெரியாரை வைத்தே திமுக உடன்பிறப்புகளை டோட்டலாக டேமேஜ் செய்த அண்ணாமலை!

பாஜகவில் ஹெச்.ராஜா எப்படியோ… அவரை போன்று திமுகவில் ஆ.ராசா என்று சொல்லும் அளவுக்கு இருவரும் சர்ச்சையின் நாயகர்களாகவே வலம் வந்து கொண்டிருக்கின்றனர். ஹிந்துக்கள் குறித்து மனு தர்மத்தில் மிகவும் கீழ்த்தரமாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இதற்கு எதிராக ஹிந்துக்கள் உரக்க குரல் கொடுப்பதே சனாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்றும் அண்மையில் ஆ.ராசா பேசியிருந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதுடன், இந்துத்துவா அமைப்புகளின் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஹிந்துக்களை இழிவுப்படுத்தும்விதமாக பேசிய ஆ.ராசா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்; அவரது எம்பி பதவி பறிக்கப்பட வேண்டும்; அவரை கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் என்றெல்லாம் பாஜக, ஆர்எஎஸ்எஸ் மற்றும் இந்து அமைப்புகள் கொதிந்தெழுந்து உள்ளனர்.

ஆனால், ஹிந்துகள் குறி்த்து தான் அண்மையில் கூறியிருந்தது தமது சொந்த கருத்து இல்லை என்றும், மனு தர்மத்தில் கூறி உள்ளதையே தான் பேசியதாகவும், இதுகுறி்த்து பெரியார் பேசியிருப்பதும் அவரது மரண சாசனம் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் திமுக எம்பி ஆ.ராசா நியாயம் கற்பித்து வருகிறார். திமுக தலைமையும் அவரை கண்டிக்காமல் மௌனம் சாதித்து வருவதால் கடுப்பான தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆ.ராசாவின் பாணிியிலேயே திமுகவினர் குறித்து பெரியார் கூறியுள்ளதாக பேசியுள்ள சில சர்ச்சைக்குரிய கருத்துகள் உடன்பிறப்புகளை டோட்டலாக டேமேஜ் செய்யும் விதத்தில் அமைந்துள்ளது.

ஆ..ராசாவை கண்டித்து சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் திமுகவினர் குறித்து பெரியார் தமது மரண சாசனம் புத்தகத்தில் (ஈ.வெ.ராவின் இறுதி பேரூரை) இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாகவும், மனு தர்மம் குறித்து பேசும் ஆ.ராசா, இதுபற்றியும் பேச வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார் அண்ணாமலை.

‘நாதி இல்லையே… சொல்கிறதற்கு நாதி இல்லையே… சிந்திக்க நாதி இல்லையே! ஒரு ஓட்டுக்கு என்னென்ன கொடுக்கிறான்? பெண்டாட்டியைத் தவிர மத்தது எல்லாத்தையும் கொடுக்கிறான். ஓட்டு வாங்குவதற்கு, இதற்கு கவலையேபடமாட்டேன் என்கிறானே! யாரது? நம்ம முன்னேற்றக் கழகத்துக் காரன்தான். மற்றவனை எல்லாம் – என்னை எல்லாம் வைவான் ‘இவனுக்கு ஏன் இதுவெல்லாம் கேடு வந்துச்சு இந்த முன்னேற்றக்காரனுக்கு?

இந்த வேலையை ஏன் பண்ணிக்கிட்டு இருக்கிறான்? அவனுக்கு ஓட்டுதான் பெரிது.. அவன் பெண்டாட்டி, பிள்ளையைப் பற்றி அவனுக்குக் கவலை இல்லை. இன்னும் கொஞ்சநாள் போனால், இது வழக்கத்தில் வந்துவிடும் என்று நம்புகிறான்… பெண்டாட்டியைக்கூடக் கொடுத்து, வாங்குகிறார்போல, ஏனென்றால் அந்த பதவி அவ்வளவு உயர்வாப் போச்சு…’ என தமது மரண சாசனத்தின் 21 ஆம் பக்கத்தில் பெரியார் குறிப்பிட்டுள்ளதாக பொதுமேடையில் பகிரங்கமாக படித்து காட்டிய அண்ணாமலை, இதுகுறித்தும் அண்ணன் ஆ.ராசா பேச வேண்டும் எனக்கூறி, ஒட்டுமொத்த திமுக உடன்பிறப்புகளையும் சீண்டி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.