கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும் இணைந்து நடத்தும் 2022 ஆம் ஆண்டிற்கான மாவட்ட இலக்கிய விழா மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் தலைமையில் (27) திகதி செவ்வாய்க்கிழமை மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்விற்கு அதிதிகளாக மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் கலாநிதி முருகு தயாநிதி மற்றும் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எம்.ஏ.சீ.ஜெய்னுலாப்தீன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.