
இளவரசியாக மாறிய அதிதி ஷங்கர்
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த விருமன் படத்தில் அறிமுகமானவர் அதிதி ஷங்கர். அதோடு அப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரு பாடலும் பின்னணி பாடியிருந்தார். முதல் படம் திரைக்கு வருவதற்கு முன்பே சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்திலும் கமிட்டான அதிதி ஷங்கர், தற்போது அப்படத்தில் மாடர்ன் கெட்டப்பில் நடித்து வருகிறார். மேலும் தொடர்ந்து போட்டோ சூட் நடத்தி சோசியல் மீடியாவில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அதிதி ஷங்கர், தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய், திரிஷா அணிந்து நடித்துள்ள இளவரசி கெட்டப்பில் ஒரு போட்டோசூட் நடத்தி அந்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ சூட் நவராத்திரி முதல் நாள் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார் அதிதி ஷங்கர்.