அமெரிக்க வயதான தம்பதியினர் தற்செயலாக ஒரே எண்ணில் 3 லொட்டரி சீட்டுகளை வாங்கியதில், அனைத்தையும் வென்றுள்ளார்.
இவ்வளவு டிக்கெட்டுகளை தெரியாமல் வாங்கி, பணத்தை வீணடிப்பதாக அவர்கள் வருத்தப்பட்டனர்.
அமெரிக்காவின் மேரிலாந்தைச் சேர்ந்த 67 வயது நபர் லொட்டரியில் 150,000 அமெரிக்க டொலர்களை பரிசாக வென்றார். அவர் தற்செயலாக 3 ஒரே மாதிரியான டிக்கெட்டுகளை வாங்கினார் மற்றும் செப்டம்பர் 22 அன்று அனைத்தையும் வென்றார்.
ஒரு பெரிய அறுவை சிகிச்சைக்கு தயாராகி வந்த அந்த நபர், இப்போது மும்மடங்கு அதிர்ஷ்டசாலி ஆனார்.
இது குறித்து வெற்றிபெற்றவர் கூறுகையில், “ஒரு முறை தவறுதலாக மூன்று டிக்கெட்டுகளை வாங்கினேன், இதனால் அந்த எண்ணில் மூன்று முறை அதிர்ஷ்டம் அடித்தது. இதை நம்பவே முடியவில்லை” என்று கூறினார்.
அவரது பெயர் தெரியாமல் பேசுவதற்காக தனது எலக்ட்ரீஷியன் யூனியனை வைத்து லோக்கல் 24 IBEW என்ற பெயரில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.
அவருக்கு ஜாக்பாட் அடித்த 5-1-3-5-9 என்ற எண்கள் அவரது வெற்றி எண்கள் அவரது மனைவியின் பிறந்தநாளின் அடிப்படையில் அமைந்தன.
Pick 5 என்ற விளையாட்டிற்காக மதியம் மற்றும் மாலை டிக்கெட்டுகளை தான் வாங்கியதை மறந்துவிட்டதாகவும், அவரது மனைவி அறியாமல் பிற்பகுதியில் இன்னொன்றை வாங்கியதாகவும் அந்த நபர் வெளிப்படுத்தினார்.
தாங்கள் இவ்வளவு டிக்கெட்டுகளை தெரியாமல் வாங்கிவிட்டோம் என்று எண்ணியபோது, பணத்தை வீணடிப்பதாக அந்த வயதான தம்பதியினர் முதலில் வருத்தப்பட்டனர்.
ஆனால், அவர்களது கவலை காணாமல் போக, ஒரே எண்ணில் இந்த ஜோடி மொத்தம் $150,000 (இலங்கை பணமதிப்பில் தோராயமாக ரூ.5.5 கோடிகள்) வென்றது.