சியோல் : தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வட கொரியா, நேற்று அடுத்தடுத்து இரண்டு ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு ஆசியா நாடான வட கொரியா இந்தாண்டு துவக்கத்தில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை, ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லும் ‘ஹைபர்சோனிக்’ ஏவுகணை ஆகியவற்றின் சோதனைகளை நடத்தியது.
கடந்த ஆகஸ்ட் மாதம் வட கொரியாவின் மேற்கு கடற்கரை பகுதியான ஆங்சோன் என்ற பகுதியில் இருந்து இரு ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியதாக, தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வடகொரியாவின் பையோங்க் நகரில் சனான் என்ற இடத்தில் குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் இரு ஏவுகணைகளை வட கொரியா ஏவி பரிசோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
தென்கொரியாவிற்கு அரசு முறைப்பயணமாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வருகை தர உள்ளார். இந்த சூழ்நிலையில் அமெரிக்காவை அச்சுறுத்தும் விதமாக இரு ஏவுகணைகளை வடகொரியா சோதித்ததாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement