காற்றில் பறக்கும் அமைச்சர்களின் உத்தரவு! பேருந்தில் அடாவடி செய்யும் மாணவர்கள்

வேலூர்: வேலூர் மாவட்டம், வேலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புறநகர் செல்லும் அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்வது வாடிக்கையாகிவிட்டது. பள்ளி மாணவர்கள் இது போன்ற செயல்கள் செய்வதில் பேருந்தில் பயணிக்கும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். படிக்கட்டில் தொங்கியபடி பாட்டுக்கு பாட்டு போட்டி நடப்பது ஆச்சரியம் அளிக்கிறது. பின் படிக்கட்டில் பாட்டை தொடங்கிய பின் அந்தப் பாட்டு முடிந்தவுடன் முன் படிக்கட்டில் தொங்கியவர் விட்ட எழுத்திலிருந்து பாட்டை ஆரம்பிக்கிறார்.

போக்குவரத்து துறை அமைச்சர் சிவ சங்கர் பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யக்கூடாது மேலும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

அதேபோல, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வது வருத்தம் அளிக்கிறது.  இதைக் கண்டறிந்தால் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக காட்பாடி – பாகாயம், வேலூர் – அமிர்தி, வேலூர் – அணைக்கட்டு இது போன்ற பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். 

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவ சங்கர் உட்பட அரசு அதிகாரிகளும் பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும், அப்படி செய்யும் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளும் காற்றில் பறக்கவிடப்படுகிறது என அனைவரும் கவலை தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.