ஃபைலுடன் பறந்த ஆளுநர்; தமிழக அரசியலில் அனல்!

நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபோது திருமாவளவன் உள்ளே புகுந்து குட்டையை குழப்பியதாலேயே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினை தடை செய்ய வேண்டும் என்றும், திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்றும், பாஜ மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அத்துடன் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் தனது டிவிட்டர் பதிவில், ‘சட்ட பிரிவு 356யை பயன்படுத்தி சட்டம் ஒழுங்கு இல்லாத மாநில அரசை கலைத்தால் என்ன?’ என கேட்டு மேலும் சூட்டை ஏற்றி உள்ளார்.

இந்த பரபரப்பான சூழலில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சீக்ரட் ஃபைல்களுடன் டெல்லியில் முகாமிட்டு உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே சமயம் ஆளுநர் ஆர்.என்.ரவியின் டெல்லி விசிட்டானது தமிழக அரசுக்கு எதிராகவோ அல்லது திருமாவளவன் குறித்தோ இல்லாமல் சாட்சாத் பாஜகவினர் தொடர்பாகவே என்பது தான் வந்துள்ள முதற்கட்ட தகவலாக இருக்கிறது.

அதாவது தமிழக பாஜகவில் உருவாகி இருக்கும் கோஷ்டிகள், இதனால் சமீபத்தில் ஜேபி.நட்டா வருகையின் போது நடந்த குளறுபடிகள் மற்றும் தமிழக பாஜகவில் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய மாற்றம் குறித்து, விரிவான அறிக்கை அளிக்கவே இந்த டெல்லி விசிட் என பரவலாக சொல்லப்படுகிறது.

தமிழ்நாடு ஆளுநர் அரசாங்க பணி நிமித்தமாக டெல்லி சென்றிருக்கலாம் என முதலில் கருதிய தமிழக பாஜக தலைமை தற்போது ஆளுநரின் அறிக்கை குறித்து அறிந்ததும் கடும் அப்செட்டில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பாஜக வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘சமீபகாலமாக பாஜக நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வருவதை செய்திகள் மூலம் காண முடிகிறது. ஆனாலும், அதை மாற்றும் வகையிலும் மக்களிடையே நற்பெயரை பெற்று வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என உழைக்கிறோம். ஆனாலும் சர்ச்சைகள் ஏதாவது ஒரு வகையில் வந்து கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி விடுகிறது’ என பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.