அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் மரியாதை நிமித்தம் சந்திப்பு

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ அலி சப்ரி 2022 செப்டெம்பர் 30ஆந் திகதி அமைச்சில் வைத்து சந்தித்தார். இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டமைக்காக உயர்ஸ்தானிகரை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் வாழ்த்தினார்.

உள்நாட்டு சவால்களை எதிர்கொள்வதற்காக அண்மையில் வழங்கப்பட்ட உடனடியான மனிதாபிமான உதவிகளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பாராட்டினார்.

சக்தி மற்றும் கல்வித் துறையில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கருத்துக்களை வெளியிட்டார். இலங்கையில் அவுஸ்திரேலிய நிறுவனங்களின் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் வரவேற்றார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பல்தரப்பு மட்டத்தில் பரஸ்பர நலன்கள் உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இதன்போது கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 அக்டோபர் 02

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.