`தவறான பூஜை; மகனின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டாய்’ – பூசாரியை தாக்கி காதை கடித்துத் துப்பிய குடும்பம்

ராஜஸ்தான் மாநிலம் இந்தூர் மாவட்டத்தின் கோட்டா பகுதியை சேர்ந்தவர் பூசாரி குஞ்ச் பிஹாரி ஷர்மா (60). இவர் லக்ஷ்மிகாந்த் சர்மா என்பருடைய வீட்டுக்கு பலமுறை சென்று பூஜை செய்து நண்பர்களாகியிருக்கிறார்கள். இந்த நிலையில், தனது 2 மகன்களில் முதல் மகனுக்கு திருமண தடை ஏற்படுகிறது. அதற்காக சத்தியநாராயணன் பூஜையை நடத்தி தடையை நீக்கவேண்டும் என பூசாரி குஞ்ச் பிஹாரி ஷர்மாவை அழைத்திருக்கிறார்.

செப்டம்பர் 29-ம் தேதி லக்ஷ்மிகாந்த் வீட்டுக்குச் சென்ற பூசாரி இரவு பூஜை நடத்தியிருக்கிறார். அதைத் தொடர்ந்து இரவு அங்கேயே தங்கியுமிருக்கிறார். இந்த நிலையில், நள்ளிரவில் லக்ஷ்மிகாந்த் சர்மா மற்றும் அவரின் இரண்டாவது மகன் விபுல் சர்மா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பூசாரி தங்கியிருந்த அறைக்கதவை உடைத்து அவரை கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.

பூஜை

அப்போது விபுல் சர்மா பூசாரியின் காதை கடித்து துப்பியிருக்கிறார். பூசாரியின் அலரல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், பூசாரியை மீட்டு சந்தன் நகர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பு, “பூசாரி பூஜை முடித்த சிலமணி நேரத்தில் லக்ஷ்மிகாந்த் சர்மாவின் முதல் மகன் வித்தியாசமாக நடந்திருக்கிறார். அதை கவனித்த அவரின் இரண்டாவது மகன் தன் தந்தையிடம் தெரிவித்திருக்கிறார்.

காவல்துறை

அப்போது, லக்ஷ்மிகாந்த் சர்மா, `பூசாரி பூஜை செய்யும் போதே சந்தேகம் இருந்தது. அவர் தான் தவறாக பூஜை செய்து தன் மகனின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டார்’ எனக் கூறியிருக்கிறார். அதன் பிறகே தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். தற்போது குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.