பிரசாந்த் கிஷோர் பிளானும், பாஜக சீக்ரெட் ஆபரேஷனும்- ராஜிவ் ரஞ்சன் பகீர்!

ராகுல் காந்தியின் ”இந்திய ஒற்றுமை பயணம்” (Bharat Jodo Yatra) தலைப்பு செய்தியாக மாறிய நிலையில், பிகாரில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் பாத யாத்திரை பேசுபொருளாக மாறியுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லப் போவதாகவும், அதற்காக பிகார் முழுவதும் 3,500 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.

இதற்காக காந்தி ஜெயந்தி நாளில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். பிரசாந்த் கிஷோரின் பாத யாத்திரை குறித்து அரசியல் கட்சிகள் பெரிதாக வாய் திறக்கவில்லை. ஆனால் பிகார் மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசியத் தலைவர் ராஜிவ் ரஞ்சன் சிங் கடுமையாக விமர்சித்து, சில கேள்விகளை முன்வைத்துள்ளார். அதாவது, இந்த யாத்திரை மூலம் சுய விளம்பரம் தேடிக் கொள்கிறார் பிரசாந்த் கிஷோர்.

பணத்தை விரயம் செய்ய தான் போகிறார். ஏன் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவை மவுனம் காக்கின்றன. பிரசாந்த் கிஷோர் விஷயத்தில் இவ்வளவு மெதுவாக செயல்பட்டால் எப்படி? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். எனக்கு தெரிந்து பிரசாந்த் கிஷோரின் பாத யாத்திரைக்கு பாஜக தான் அரசியல் வியூகம் வகுத்து கொடுத்திருக்கிறது.

அவர்கள் தான் நிதியும் செலவிட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே பாத யாத்திரைக்கான நிதி குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை. தற்போதைய சூழலில் மத்திய புலனாய்வு அமைப்புகள் அனைத்தும் தேஜஸ்வி யாதவ் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரையே தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

பிரசாந்த் கிஷோரை வேண்டுமென்றே தவிர்க்கின்றன. கடந்த 30-35 ஆண்டுகளில் பிகார் எப்படிப்பட்ட வளர்ச்சியை அடைந்திருக்கிறது என்று நேரில் பார்க்கப் போவதாக பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறார். இதை குழந்தையிடம் கேட்டால் கூட போதும். தெளிவாக சொல்லிவிடுமே. முதல்வர் நிதிஷ் குமாரின் தலைமையின் கீழ் பிகார் மாநிலம் சிறப்பான வளர்ச்சியை அடைந்திருக்கிறது என்று.

பிரசாந்த் கிஷோர் ஒன்றும் எங்களுக்கு சான்றளிக்க வேண்டியது இல்லை. எனவே என்னுடைய இரண்டு கேள்விகளுக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். கடந்த 30 முதல் 35 ஆண்டுகளில் பிகாரில் எத்தனை நாட்கள் செலவிட்டிருக்கிறார்? பிகாரை பற்றிய அவருடைய புரிதல் என்ன? என்று கேள்வி எழுப்பி விமர்சித்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.