'இந்தியாவை ''ஹிந்து ராஷ்டிரா'' என்று மோடி அறிவிப்பார்'… 'ஆயுதம் ஏந்த தயாராகுங்கள்'…

இந்தியாவின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 மே மாதம் நடக்கவுள்ளது. இந்நிலையில், 2024 தேர்தலில் பாஜக ஆட்சி அமைந்ததும் இந்திய அரசியல் சூழல் வெகுவாக மாற வாய்ப்புள்ளதாக எதிர்கட்சிகளை சேர்ந்தவர் கலக்கமாக பேசி வருகின்றனர். மேலும் அப்போது, இதுவரை நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு சட்டம் இருக்காது என்றும் மனுதர்மமே இனி அரசமைப்பு சட்டமாக இருக்கும் என சொல்வார்கள் என்றும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி இந்தியாவின் பெயரை ஹிந்து ராஷ்ட்ரியமாக அறிவித்தவுடன் இந்துக்கள் அனைவரும் சிறுபான்மையினருக்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டும் என பொதுகூட்டத்தில் உ.பி. பாடகர் தர்மேந்திர பாண்டே கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் சித்தார்த்தா நகரில் நடந்த ‘ஜாக்ரன்ஸ்’ நிகழ்ச்சியில் பிரபல பாடகர் தர்மேந்திர பாண்டே கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியின் மத்தியில் பேசியவர் பிரதமர் மோடி இந்தியாவை ”ஹிந்து ராஷ்ட்ரியமாக” அறிவித்தவுடன் ஹிந்துக்கள் அனைவரும் சிறுபான்மையினருக்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டும். நரேந்திர மோடியிடம் இருந்து உத்தரவு வருவதற்கு முன்பே நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். உங்கள் வீடுகளின் மீது காவி கொடி இருக்க வேண்டும். தீபங்களை ஏற்ற வேண்டும். உங்கள் வீடுகளில் ஒரு கூர்மையான அரிவாளை தயார் செய்யுங்கள். பெண்கள் தங்களுக்கான ஆயுதத்தை வைத்திருங்கள். இந்தியாவை பிரதமர் மோடி ஹிந்து ராஷ்டிரா என்று அறிவித்தவுடன் அவைகள் தேவைப்படும் என்று தர்மேந்திர பாண்டே பேசியதான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட இந்து பாடகர் மக்களிடையே மதமோதலை ஏற்படுத்தும் விதமாகவும், ஜனநாயக நாடான இந்தியாவுக்கு மத சார்பில் புதிய பெயரை மோடி அறிவிப்பார் என்று தர்மேந்திர பாண்டே பேசியதற்கு கடுமையான கண்டங்கள் எழுந்து வருகிறது. இந்த விஷயத்தை சித்தார்த்தா நகர் போலீசாரும் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள சித்தார்த்தா நகர் காவல்துறை, வீடியோவை ஆய்வு செய்து வருகிறோம் என்றும் விரைவில் விசாரணை நடக்கும் என்றும் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.