ஒரே நேரத்தில் 300 ஆடைகள் அணிந்து உலக சாதனை முயற்சி!

கோவையை சேர்ந்த பேஷன் ஆர்ட் இன்ஸ்ட்டியூட்டில் பயிற்சி பெற்று வரும் இல்லத்தரசிகள் தாங்களே டிசைன் செய்து உருவாக்கிய ஆடைகளை தங்களது குழந்தைகள் மற்றும் மாடல்களை வைத்து ஆடை அலங்கார அணி வகுப்பை நடத்தி அசத்தியுள்ளனர்.  இந்த அணி வகுப்பை உலக சாதனை முயற்சியாக மூன்று மணி நேரத்தில் 300 ஆடைகளை சுமார் எழுபது மாடல்களை கொண்டு இந்த அணிவகுப்பு நடைபெற்றது.

இதற்கான துவக்க நிகழ்ச்சி பேஷன் ஆர்ட் இன்ஸ்ட்டியூட் நிர்வாக இயக்குனர் சுகுணா சண்முகம் தலைமையில் நடைபெற்றது. கோவை அவினாசி சாலையில் உள்ள ஃபன் மால்  வணிக வளாகத்தில் நடைபெற்ற இதில், சிறப்பு அழைப்பாளர்களாக, பிரபல பெண் பத்திரக்கையாளர் வாசுகி ராஜா, சர்வதேச ஜூனியர் மாடல் ராணா சிவக்குமார், யு.ஆர்.எஃப் சாதனை புத்தகத்தின் ஜூரி சுனில் ஜோசப்,தீர்ப்பாளர் சியா ஸ்ரீ,பி ரபல நடிகர் மேக்கப் கலைஞர் சத்யா, பிரபல மாடல் மணிகண்டன், மருத்தூவரும் திருமதி கோயமுத்தூர் காயத்ரி நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

covai

சாதனை நிகழ்ச்சியில், கூடுதல் சிறப்பாக சாதாரண இல்லத்தரசிகள் வடிவமைத்த ஆடைகளை அவர்களது குழந்தைகளே அணிந்து வந்து ஒய்யார நடை நடந்து அசத்தினர். இவர்களது இந்த சாதனை யூ.ஆர்.எஃப் .உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.