பருவமடையும் பெண்ணுக்கு இத்தகைய தருணம் மிகவும் தாழ்மையான அனுபவம் மேகன் மார்க்கல் பேச்சு.
எனக்கு அப்போது நீச்சல் உடை ஒன்று மட்டுமே வேண்டும் என மேகன் மார்க்கல் நினைவு கூறல்.
சசெக்ஸின் டச்சஸ் மேகன் மார்க்கல் அவருடைய இளம் வயதில் நிர்வாண ஸ்பாவில் சந்தித்த சங்கடத்தை பாட்காஸ்ட் நிகழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளார்.
இளவரசர் ஹரியும், மேகன் மார்க்கலும் 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சுமார் 18 மில்லியன் பவுண்டு மதிப்பிலான பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை ஆடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனமான spotify-யுடன் மேற்கொண்டனர்.
getty
அதனடிப்படையில் spotify-யில் மேகன் மார்க்கலால் ஆரம்பிக்கப்பட்ட “ஆர்க்கிடைப்ஸ்” (Archetypes) என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில், இதுவரை மூன்று அத்தியாயங்கள் வெளியிடப்பட்டு இருந்தன.
ஆனால் பிரித்தானியாவின் மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து, இளவரசி மேகன் மார்க்கல் நடத்தி வந்த spotify போட்காஸ்ட் நிகழ்ச்சி இடைநிறுத்தம் செய்யப்பட்டது.
கடந்த வாரம் ராணி எலிசபெத்தின் துக்கம் நிறைவடைந்த நிலையில், நான்கு வார இடைவெளிக்கு பிறகு இளவரசி மேகன் மார்க்கலின் spotify போட்காஸ்ட் நிகழ்ச்சி அக்டோபர் 4ம் திகதியான இன்று மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
getty
இதில் பத்திரிக்கையாளர் லிசா லிங் மற்றும் நகைச்சுவை நடிகர் மார்கரெட் சோ (Margaret Cho) ஆகியோருடன் பொழுதுபோக்குத் துறையில் ஆசிய அமெரிக்க பெண்கள் செல்வது தொடர்பாக இளவரசி மேகன் மார்க்கல் உரையாடல் நடத்தினார்.
அப்போது சசெக்ஸின் டச்சஸ் மேகன் மார்க்கல் இளம் பதின்வயதில் தனது தாயார் டோரியா ராக்லாண்டுடன் கொரிய ஸ்பாக்களுக்குச் சென்றது தொடர்பான தருணத்தை நினைவு கூர்ந்தார்.
பருவமடையும் பெண்ணுக்கு இத்தகைய தருணம் மிகவும் தாழ்மையான அனுபவம், ஏனென்றால் 9 வயது முதல் 90 வயது வரை உள்ள பெண்கள் அனைவரும் அறைக்குள் நிர்வாணமாக நடந்து கொண்டு வரிசை வரிசையாக வைக்கப்பட்டு இருந்த மேஜைகளில் உடலை தேய்த்து கழுவதற்காக (body scrub) காத்திருப்பார்கள் என தெரிவித்தார்.
getty
ஆனால் தனக்கோ அப்போது ஒரு நீச்சல் உடை மட்டுமே வேண்டும் என 41 வயதுடைய மேகன் மார்க்கல் spotify போட்காஸ்ட் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: ட்விட்டரை விலைக்கு வாங்க எலான் மஸ்க் மீண்டும் முயற்சி: இடைநிறுத்தப்பட்டது பங்கு வர்த்தகம்
மேலும் நான் அந்த வாலிப சங்கடத்தை முடித்தவுடன், என் அம்மாவும் நானும், மாடியில் இருக்கும் அறையில் உட்கார்ந்து, மிகவும் சுவையான நூடுல்ஸை சாப்பிடுவோம் என தெரிவித்துள்ளார்.