மர்ம தேசம் தொடரில் சிறு வயது பையனாக அபாராமக நடித்திருப்பார் லோகேஷ். ‘ஜீ பூம்பா’ தொடரிலும் இவர் தான் நடித்திருந்தார். இயக்குனராக வேண்டும் என்கிற கனவோடு பயணித்தவர் இன்று தற்கொலை செய்து கொண்டார்.
சமீபத்தில் விகடன் இணையதளத்தில் வெளியாகும் ‘அப்போ இப்போ’ தொடருக்காக அவரை சந்தித்து பேசியிருந்தோம்.
மர்மதேசம் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி நாங்கள் எல்லாரும் சந்தித்து பழைய நினைவுகள் குறித்து பேசினோம் என மகிழ்ச்சியுடன் நம்மிடம் அந்த செய்தியை பகிர்ந்து கொண்டார்.

மர்மதேசம் இயக்குனர் நாகா மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர் லோகேஷ். அவர் சொன்ன ஒரு காரணத்திற்காக நடிப்பதை விட்டுவிட்டு டைரக்ஷன், எடிட்டிங் என திரைக்கு பின்னால் நடக்கும் அத்தனை வேலைகளையும் கற்றுத் தேர்ந்தவர்.
தற்போது ஒரு படத்தை இயக்குவதற்கு தயாராகிவிட்டதாகவும், அதற்கேற்ற இடங்களை தேடிக் கொண்டிருப்பதாகவும் நம்மிடையே பகிர்ந்திருந்தார்.
இவர் எம் ஆர் ராதா தனக்கு தாத்தா முறை தான் என்றும், தாத்தா உயிருடன் இருந்தப்ப நான் இல்லைங்கிற வருத்தம் எனக்கு நிறையவே இருக்கு… ஒருமுறையாவது அவரை பார்த்திருக்கலாம் எனவும் கூறினார்.