பாங்காக் :தாய்லாந்து சென்ற இந்திய பயணி குலாப் ஜாமூன் எடுத்து செல்ல விமான நிலைய அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்து, அதை அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவர் வினியோகித்த, ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்தியாவைச் சேர்ந்த ஹிமான்ஷு தேவ்கன் என்ற பயணி, தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் உள்ள புக்கட் தீவுக்கு விமானம் வாயிலாக சென்றார். விமான நிலைய பாதுகாப்பு சோதனையின் போது, அவரது கைப்பையில் இருந்த, ‘டின்’ குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.
‘இது குலாப் ஜாமூன் என்ற இனிப்பு வகை’ என அவர் விளக்கம் அளித்தார். ‘இது போன்ற பொருட்களை கைப்பையில் எடுத்து செல்ல பாதுகாப்பு விதிகளில் அனுமதியில்லை’ என அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். இது போன்ற நேரங்களில், அந்த பொருட்களை குப்பை தொட்டியில் வீசுவதோ அல்லது விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு வருவதோ தான் வழக்கமாக நடக்கும். ஆனால் ஹிமான்ஷு தேவ்கன் மாற்றி யோசித்தார். அந்த டின்னை பிரித்து, அதில் இருந்த குலாப் ஜாமூனை விமான நிலைய அதிகாரிகளுக்கு வினியோகிக்க துவங்கினார். முதலில் தயங்கியவர்கள் பின்னர் இனிப்பை சாப்பிட்டுவிட்டு ருசியாக இருப்பதாக தெரிவித்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை, 11 லட்சம் பேர் இதுவரை பார்த்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement