சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் 95% நிறைவடையவில்லை என்பதையும் பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள்தான் 95% நிறைவடைந்துள்ளது என்பதையும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிய வேண்டும் என்று மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவனை பணிகள்தான் 95% முடிந்துள்ளன. அந்த மருத்துவமனையைத்தான் வரும் 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க இருக்கிறார். அதே 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் இன்னமும் பொட்டல்காடாகவே இருக்கிறது. அந்த பொட்டல்காட்டைக் காட்டி 95% பணிகள் முடிந்துவிட்டது என்று கூறினால் என்ன? என்று பாடம் வேறு நடத்தப்படுகிறது. ஜெ.பி. நட்டா சொன்ன 95% பணிகள் பிலாஸ்பூரில்தான் நடந்துள்ளது என்பதை அண்ணாமலை அறிக” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையாகவே
95 % பணிமுடிந்த பிலாஸ்பூர் எய்ம்ஸ்சை அக் 5 ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்.அதே 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் இன்னும் பொட்டல்காடாகவே இருக்கிறது.
அந்த பொட்டல்காட்டைக் காட்டி 95 சதவிகிதம் என்றால் என்ன? என்று பாடம் வேறு நடத்தப்படுகிறது.1/2 pic.twitter.com/oxT9S6wdyj
— Su Venkatesan MP (@SuVe4Madurai) October 4, 2022