ராணி எலிசபெத்தை புறக்கணித்த இளவரசி மேகன் மார்க்கல்: மீண்டும் ஒளிபரப்பானது spotify போட்காஸ்ட்


spotify போட்காஸ்ட் நிகழ்ச்சியில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை குறிப்பிடாத இளவரசி மேகன்.


பிற கலாச்சாரங்களை அறிந்து கொள்வதில் தனக்கு உண்மையான காதல் இருப்பதாக மேகன் மார்க்கல் அறிவிப்பு.

ராணியின் மறைவை தொடர்ந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டு இருந்த இளவரசி மேகன் மார்க்கலின் “ஆர்க்கிடைப்ஸ்” spotify போட்காஸ்ட்  தற்போது மீண்டும் ஒளிப்பரப்பிற்கு திரும்பியுள்ளது.

இளவரசர் ஹரியும், மேகன் மார்க்கலும் 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சுமார் 18 மில்லியன் பவுண்டு மதிப்பிலான பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை ஆடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனமான  spotify-யுடன் மேற்கொண்டனர்.

ராணி எலிசபெத்தை புறக்கணித்த இளவரசி மேகன் மார்க்கல்: மீண்டும் ஒளிபரப்பானது spotify போட்காஸ்ட் | Meghan Podcast Returns After Break For Queen DeathPA

அதனடிப்படையில் spotify-யில் ஆரம்பிக்கப்பட்ட “ஆர்க்கிடைப்ஸ்” (Archetypes)  என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில்,  இதுவரை மூன்று அத்தியாயங்கள் வெளியிடப்பட்டு இருந்தன.

செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் பிரித்தானியாவின் மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து, இளவரசி மேகன் மார்க்கல் நடத்தி வந்த spotify போட்காஸ்ட் நிகழ்ச்சி இடைநிறுத்தம் செய்யப்பட்டது.

ராணி எலிசபெத்தை புறக்கணித்த இளவரசி மேகன் மார்க்கல்: மீண்டும் ஒளிபரப்பானது spotify போட்காஸ்ட் | Meghan Podcast Returns After Break For Queen DeathSPOTIFY

ஆனால் கடந்த வாரம் ராணி எலிசபெத்தின் துக்கம் நிறைவடைந்த நிலையில், நான்கு வார இடைவெளிக்கு பிறகு இளவரசி மேகன் மார்க்கலின் spotify போட்காஸ்ட் நிகழ்ச்சி அக்டோபர் 4ம் திகதியான இன்று மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

இதில் மேகன் மார்க்கல் நகைச்சுவை நடிகர் மார்க்ரெட் சோவுடன் பொழுதுபோக்குத் துறையில் ஆசிய அமெரிக்க பெண்கள் செல்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இந்த போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பிரித்தானிய மகாராணியின் மறைவு குறித்து குறிப்பிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராணியின் மரணத்தை மேகன் குறிப்பிடவில்லை, மற்றும் பத்திரிக்கையாளர் லிசா லிங் மற்றும் நகைச்சுவை நடிகர் மார்கரெட் சோ (Margaret Cho) ஆகியோருடன் “டிராகன் லேடி” ஸ்டீரியோடைப் பற்றி ஆராய்வதில் மேகன் நேரடியாக இறங்கினார்.

ராணி எலிசபெத்தை புறக்கணித்த இளவரசி மேகன் மார்க்கல்: மீண்டும் ஒளிபரப்பானது spotify போட்காஸ்ட் | Meghan Podcast Returns After Break For Queen DeathPA

அப்போது டச்சஸ், லாஸ் ஏஞ்சல்ஸில் வளர்ந்த அனுபவம் பற்றி பேசத் தொடங்கினார், இது நீங்கள் தினசரி அடிப்படையில் பார்க்க, உணர, கேட்க மற்றும் சுவைக்கக்கூடிய கலாச்சாரம் நிறைந்தது” மற்றும் பிற கலாச்சாரங்களை அறிந்து கொள்வதில் தனக்கு “உண்மையான காதல்” இருப்பதாக தெரிவித்தார்.

அத்துடன் ஆசிய வம்சாவளி பெண்கள் எதிர்கொள்ளும் களங்கம் பற்றி தனக்கு பல ஆண்டுகளுக்கு தெரியாது என்று மேகன் தெரிவித்தார்.  

கூடுதல் செய்திகளுக்கு: அரச குடும்பத்தின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படத்தில் ஒளிந்து இருக்கும் தகவல்: உடல் மொழி நிபுணர் விளக்கம்!

மேலும் டிராகன் லேடி, கிழக்கு ஆசிய சோதனையாளர், அதன் மர்மமான வெளிநாட்டு கவர்ச்சியானது கொடூரமான மற்றும் ஆபத்தானது என எழுதப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.