சர்வதேச ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் ஆசிரியர் தின நிகழ்வு அதிபர் சி.மொரீன் தலைமையில் இன்று (6) திகதி கலாசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
ஆசிரியர்களின் உன்னத சேவையினை போற்றும் முகமாக சர்வதேச ரீதியில் ஆண்டுதோறும் ஒக்டோபர் மாதம் 06 திகதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஓய்வுநிலை பேராசிரியர் எம் .செல்வராஜா கலந்துகொண்டு
நிகழ்வை சிறப்பித்ததுடன், விசேட அதிதியாக ஓய்வு பெற்ற வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.எஸ்.சக்கரவர்த்தி,மற்றும் விரிவுரையாளர்கள் ஆசிரியர்கள், ஆசிரிய பயிலுனர்கள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.