ஆயுதம் ஏந்திய படகுகள் பரிசோதனை! ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படும் ஆளில்லா படகு

புதுடெல்லி: பாதுகாப்புத் துறை கண்காட்சி அக்டோபர் 18 முதல் 22 வரை நடைபெற உள்ள நிலையில், அதற்குக் முன்னதாக, புனேவில் 3 ஆளில்லா தொலை கட்டுப்பாட்டு ஆயுதம் பொருத்தப்பட்ட படகுகளை பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், டிஆர்டிஓ சோதனை செய்தது. இந்த படகுகளை தனியார் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனமான சாகர் டிஃபென்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்துடன் இணைந்து DRDO உருவாக்கியுள்ளது. இந்தப் படகுகள், கண்காணிப்பு நோக்கங்களுக்காகவும், ரோந்துப் பணிக்காகவும், உளவு பார்க்கவும் ஒட்டுமொத்த கடல் பாதுகாப்புக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆளில்லா படகுகள் மனித உயிர்கள் பலியாகும் அபாயத்தை நீக்குகிறது என்பது தனிச் சிறப்பாகும். தொழில்நுட்ப அம்சங்களைப் பொருத்தவரை, இந்தப் படகுகள் சுமார் 4 மணி நேரம் தாங்கும் திறன் கொண்டவை, இந்தப் படகுகள் வெவ்வேறு வகைகளில் வேறுபடுகின்றன. தற்போது, படகு அதிகபட்சமாக மணிக்கு 10 கடல் மைல் வேகத்தில் செல்ல முடியும், ஆனால் அதை மேலும் 25 கடல் மைல்களாக அதிகரிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது. இணையத்தில் ஏஎன்ஐ செய்தி முகமையால் வெளியிடப்பட்ட பயிற்சி வீடியோவை பலரும் பகிர்ந்துள்ளனர். பலரும் பார்த்து, பகிர்ந்து, பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த படகுகளின் சில வகைகள் லித்தியம் பேட்டரிகள் கொண்ட மின்சார உந்துவிசை அமைப்பைப் பயன்படுத்துகின்றன, சிலவற்றில் பெட்ரோலைப் பயன்படுத்தும் போர்டு எஞ்சினும் உள்ளது என்று டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.

பாதுகாப்புத் துறை கண்காட்சியை முன்னிட்டு, புனேவில் ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படும் இந்த படகுகளில் ஆயுதம் பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்(டிஆர்டிஓ) உருவாக்கியுள்ள படகு சோதனை, பூனேயின் பாமா அஸ்கேட் அணையில் நேற்று நடைபெற்றது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.