கிடப்பில் போடப்பட்டதா வணங்கான்?… உண்மையை உடைத்த நடிகர்

தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய இயக்குநர்களில் ஒருவர் பாலா. யாராலும் கண்டுகொள்ளப்படாத, ஒதுக்கப்பட்ட களமும், மனிதர்களுமே இவரது திரைப்படங்களில் இடம்பெறும். பத்து படங்கள் மட்டுமே இயக்கியிருக்கும் பாலா இதுவரை பல விருதுகளை வென்றிருக்கிறார். கடைசியாக அவர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து வர்மா படத்தை இயக்கினார்.ஆனால், படம் திருப்தி தராததால் அவரை நீக்கிவிட்டு வேறு ஒருவரை வைத்து மீண்டும் வர்மா படத்தை இயக்க வைத்தது தயாரிப்பு தரப்பு. மிகச்சிறந்த படைப்பாளியான பாலாவுக்கா இந்த கதி என பலரும் தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்.

அதன் பிறகு சில காலம் அமைதியாக இருந்த பாலா சூர்யாவுடன் இணையவிருப்பதாக அறிவித்தார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துவருகிறார். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்தது. இதனையடுத்து வணங்கான் படத்தின் ஷூட்டிங் நின்றுவிட்டதாகவும், சூர்யாவுக்கும், பாலாவுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

இந்தத் தகவல் தீயாய் பரவிய சூழலில்,  இயக்குநர் பாலாவின் பிறந்தநாளான ஜூலை 11ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. படத்துக்கு வணங்கான் என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் வணங்கான படத்தின் பாடல் பதிவு தொடங்கிவிட்டதாகவும் ஜிவி பிரகாஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வணங்கான் படம் கிடப்பில் போடப்பட்டுவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இந்தத் தகவலை படத்தில் நடித்திருக்கும் ஹூசைனி மறுத்திருக்கிறார். இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், “வணங்கான் படத்தில் நடிப்பதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன், படத்திற்கான புதிய தோற்றத்தில் நடிக்க உள்ளளேன். அதற்காக தயாராகிவருகிறேன். படத்தின் ஷூட்டிங் போது வேண்டுமானாலும் படப்பிடிப்பு தொடங்கலாம்” என்றார். இதன் மூலம் வணங்கான் படம் கிடப்பில் போடப்படவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.