வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: தண்டவாளத்தின் குறுக்கே வந்த எருமை மாடுகள் மீது வந்தே பாரத் ரயில் மோதிய சம்பவத்தில் ரயில் முன்பகுதி சேதமடைந்தது. அந்த ரயில் தற்போது சரி செய்யப்பட்டது.
மஹாராஷ்ராவின் மும்பையிலிருந்து குஜராத் மாநிலம் காந்திநகருக்கு வந்தே பாரத் எக்ஸ் பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. குஜராத்திலிருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில் வாத்வா ரயில் நிலையத்தில் நின்றுவிட்டு மணிநகர் நோக்கி புறப்பட்ட போது தண்டவாளத்தின் குறுக்கே எருமை மாடுகள் கூட்டமாக வந்ததால் எருமைகள் மீது மோதியதில் ரயிலின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
![]() |
இந்த விபத்தில் எருமை மாடுகள் சில பலியானதாக கூறப்படுகிறது. சேதமடைந்த ரயிலின் புகைப்படங்கள், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில் சேதமடைந்த ரயிலில் முன்பகுதி சரி செய்யப்பட்டது. இன்று வழக்கம் போல் ரயில் சேவை துவங்கியது. இதனை மேற்கு ரயில் நிர்வாகம் புகைபடங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. சம்பவத்திற்கு காரணமாக எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு படையினர் சார்பில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மீண்டும் அதே சம்பவம்
இதற்கிடையே இன்று அதே பகுதியில் பசு மாடு ஒன்றின் மீது ரயில் மோதியதில் ரயிலின் முன் பகுதியில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 2 நாட்களில் 2-வது முறையாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கால்நடைகள் மீது மோதிய சம்பவம் நடந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement