இன்றைக்கு பல வீடுகளில் மாடி இருக்கிறதோ இல்லையோ, மாடித்தோட்டம் கண்டிப்பாக இருக்கிறது. இன்று பெரும்பாலானோர் இயற்கையோடு இணைந்து வாழவே விரும்புகிறார்கள். அதனால் தற்போதைய காலகட்டத்தில் மாடித்தோட்டம் தான் ட்ரெண்டிங்.

மாடித்தோட்டத்தை உங்கள் வீடுகளில் அமைக்க விரும்புகிறீர்களா? அல்லது நீங்கள் ஏற்கனவே உங்களது வீட்டில் அமைத்திருக்கும் மாடி தோட்டத்தை சிறப்பாக்க வேண்டுமா? இதோ உங்களுக்காக வருகிறது “வீட்டிலும் செய்யலாம் விவசாயம்! மாபெரும் மாடித்தோட்ட கருத்தரங்கு!”
இந்த நேரடி நிகழ்ச்சியை தமிழ்நாடு அரசு தோட்டக்கலை துறை, டி.ஜி.வைணவக் கல்லூரியின் தாவரவியல் துறை மற்றும் பசுமை விகடன் இணைந்து வழங்குகிறது. இந்த விழாவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநில வளர்ச்சி கொள்கை குழு உறுப்பினர் மற்றும் மண்புழு விஞ்ஞானி முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில், மாடித்தோட்ட விவசாயி மைத்ரேயன், மாடித்தோட்ட பயிற்றுநர் பிரியா ராஜநாராயணன் ஆகியோர் கலந்துக்கொள்ள உள்ளனர்.
இந்த நேரடி நிகழ்ச்சி குறித்து முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் சொல்லும் முன்னுரை…
மேலும் நேரடி நிகழ்ச்சியில்…
1. மாடித்தோட்டத்தில் செடிகளை வளர்க்கும் நுட்பங்களின் ஹைலைட்ஸ்!
2. மாடித்தோட்டத்தை எந்தெந்த காலங்களில் அமைக்கலாம்?
3. மாடித்தோட்டம் அமைப்பதற்கான பைகள், செடிகள், உபகரணங்கள் எங்கு கிடைக்கும்?

4. நோய் கட்டுப்பாடு, இயற்கை இடுபொருள் தயாரிக்கும் முறைகள்!
5. முன்னோடி மாடித்தோட்ட விவசாயிகள், வல்லுநர்களின் கருத்துரை!
இன்னும் பல பல தகவல்கள்…
நேரடி நிகழ்ச்சி எங்கே? எப்போது?
நாள்: அக்டோபர், 16 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை
இடம்: டி.ஜி.வைணவக் கல்லூரி, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம், சென்னை-106.
முக்கியமாக, அனுமதி இலவசம்…இலவசம்…இலவசம்…ஆனால் முன்பதிவு அவசியம்!
முன்பதிவுக்கு 9940022128 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யவும்.
மேலும்…
தேநீர், சிற்றுண்டி இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலைத்துறை மூலம் மூலிகைச் செடிகள், மலர்ச் செடிகள், காய்கறி விதைகள், மாடித்தோட்ட பைகள் மற்றும் இடுபொருள்கள் குறைந்த விலையில் கிடைக்கும். தவிர, கண்காட்சி அரங்குகளும் இடம் பெற உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாடித்தோட்டம் அமைக்கலாம் வாங்க!