கமிலா தனது முதல் கணவரை விவாகரத்து செய்ய காரணம் என்ன? மன்னர் சார்லஸை மணப்பதற்கு முன் நடந்த விஷயம்


கமிலா தனது முதல் கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணம்.

விவாகரத்து நடவடிக்கையின் போது கூறப்பட்டிருந்த தகவல்கள் 

கமிலா தனது முதல் கணவர் ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸை விவாகரத்து செய்ததற்கான உண்மை காரணம் தெரியவந்துள்ளது.
கமிலாவுக்கும், ஆண்ட்ருவுக்கும் கடந்த 1973ல் திருமணம் நடைபெற்ற நிலையில் 1995ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இதன்பின்னர் கமிலா, சார்லஸை கடந்த 2005ல் திருமணம் செய்து கொண்டார்.

என்ன தான் தாமதமாக சார்லஸ் – கமிலா திருமணம் நடந்தாலும் இருவரும் வெகுகாலமாகவே காதலித்து வந்தனர்.
அதன்படி தங்கள் முதல் திருமண பந்தத்தின் போதே இருவரும் காதல் வயப்பட்டிருந்தனர்.

கடந்த 1992ல் சார்லஸ் – கமிலா இரவு நேரத்தில் வெகுநேரம் தொலைபேசியில் பேசிய விவகாரம் பூதாகரமாகி பொதுமக்களுக்கு அது குறித்து தெரியவந்தது.
இருப்பினும், கமிலா முன்னாள் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியான தனது கணவர் ஆண்ட்ரூவை பிரிந்ததற்கு இது அதிகாரப்பூர்வ காரணம் அல்ல.

கமிலா தனது முதல் கணவரை விவாகரத்து செய்ய காரணம் என்ன? மன்னர் சார்லஸை மணப்பதற்கு முன் நடந்த விஷயம் | Why Camilla Divorced Her First Husband Andrew

Shutterstock

ஆண்ட்ரூவை கமிலா விவாகரத்து செய்ய காரணம் என்ன?

விவாகரத்து நடவடிக்கையின் போது அது தொடர்பான அறிக்கையில், கமிலா மற்றும் ஆண்ட்ரூ சேர்ந்து வாழ்வதற்கான ஆர்வம் அவர்களிடம் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் டெய்லி எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை நிபுணர் வெய்ன் பிரான்சிஸ் இது தொடர்பான முக்கிய உண்மையை வெளிப்படுத்தியிருந்தார்.

அதன்படி, கமிலா சார்லஸுடன் வைத்திருந்த தொடர்பு விவகாரத்தால் ஆண்ட்ரூ பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்ததாக தெரிவித்திருந்தார்.
ஆனால் இது விவாகரத்து ஆவணத்தில் குறிப்பிடப்படவில்லை.

இதோடு ஆண்ட்ருவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் காதல் இருந்தது. அதாவது 1996ல் ரோஸ்மேரி பிட்மேனை திருமணம் செய்து கொண்டார்.
ரோஸ்மேரி புற்றுநோயால் கடந்த 2010ல் உயிரிழந்துவிட்டார், அவர் இறக்கும் வரையில் ஆண்ட்ரூ அவருடன் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கமிலா தனது முதல் கணவரை விவாகரத்து செய்ய காரணம் என்ன? மன்னர் சார்லஸை மணப்பதற்கு முன் நடந்த விஷயம் | Why Camilla Divorced Her First Husband Andrew

FRANK BARRATT//GETTY IMAGES



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.