
கிக் படத்தில் பின்னணி பாடகராக அறிமுகமான சந்தானம்
சந்தானம் தற்போது கிக் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கி வரும் இப்படத்தின் டீசர் வெளியான நிலையில், அக்டோபர் 10ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு சனிக்கிழமை வருகிறான் என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாக உள்ளது. இந்த பாடலை முதன்முறையாக பாடி பின்னணி பாடகராக அறிமுகம் ஆகி இருக்கிறார் சந்தானம். காமெடி ரொமான்ஸ் கலந்த கதையில் உருவாகியுள்ள இந்த கிக் படத்தில் சந்தானத்துடன் தன்யா ஹோப் , தம்பி ராமையா, கோவை சரளா, மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். அர்ஜூன் ஜன்யா இசையமைத்துள்ளார்.